மேலும் அறிய

Venkat Prabhu : ”விஜய் மீசை எடுத்ததற்காக என்னை கேவலமா திட்டுனாங்க..” டீ ஏஜிங் விமர்சனங்களுக்கு வெங்கட் பிரபு பதில்

தி கோட் படத்தில் டீஏஜிங் செய்த விஜயின் லுக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. டீஏஜிங் செய்வதில் தனக்கு இருந்த சவால்களை குறித்து தி கோட் ட்ரெய்லர் வெளியீட்டில் அவர் பேசியுள்ளார்

தி கோட் ட்ரெய்லர் லாஞ்ச்

வெங்கட் பிரபு இயக்கியுள்ள விஜயின் தி கோட் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகியது. கால  நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள் என்றாலும் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பத்திரிகையாளர்களை சந்தித்தனர். படம் குறித்தும் விஜயின் அரசியல் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தார்கள். முக்கியமாக இப்படத்தில் டீ ஏஜிங் செய்யப்பட்ட விஜயின் மகன் கதாபாத்திரத்திற்கு நிறைய விமர்சனங்கள் எழுந்தது குறித்து இந்த சந்திப்பில் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

இது குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியபோது..

விஜய் முகத்தில்  கையை வைப்பது அவ்வளவு ஈஸி இல்ல

"விஜய் சார் முகத்தில் கை வைப்பது என்பது அவ்வளவு இஸியான வேலை கிடையாது. அதை எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக டீஏஜிங் தொழில் நுட்பத்தில் தலை சிறந்த கம்பெனியான லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தோம். சமீபத்தில் வெளியான டெட்பூல் படத்திற்கும் அதே நிறுவனம்தான் வி.எஃப்.எக்ஸ் செய்துள்ளது.

இந்த படத்தில் நாங்கள் 3D யில் டபுள் ஆக்‌ஷன் செய்து அதில் டீ ஏஜிங் செய்திருக்கிறோம். அது ரொம்பவும் கஷ்டமான ஒன்று. அதில் எந்த வித குறையும் இல்லாமல் நாங்கள் செய்ய நினைத்தோம்.

அதற்கான தொழில்நுட்பம் இன்னும் இங்கே வராததால் வெளிநாட்டு  நிறுவனத்தை அனுகினோம்" என்று அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்தார்.

கேவலமா திட்டுனாங்க..

"விஜயை 23 வயசு பையனாக தான் நான் காட்டவேண்டும் என்று ஆசைப்பட்டேன். விஜய் சாரும் முடிந்த அளவிற்கு தன்னை மாதிரியே அது தன்னைபோல் இல்லாமல் ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். விஜய் சாருடைய முகம் ரொம்ப பழக்கப்பட்ட ஒரு முகம். அதனால் மாற்றத்தை உடனே நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆரம்பத்தில் நாங்கள் டீஏஜிங் செய்தபோது விஜயின் சாரின் தாடைப்பகுதி ரொம்ப ஓட்டியிருந்தது. ஸ்பார்க் பாடலில் கூட அப்படி இருந்தது. அதற்கு பின் தான் நம்ம ரொம்ப எக்ஸ்பெரிமெண்ட் பண்ணக்கூடாது. ஓரளவிற்கு விஜயை இளமையாக காட்டினால் போதும் என்று மறுபடியும் வேலை செய்தோம். இது எங்களுக்கே ஒரு பெரிய பாடம்தான். அதனால்தான் இந்த ட்ரெய்லரை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

முதல் முதலாக விஜய் ஷேவ் பண்ணிட்டு வந்தபோது என்னை கேவலமா திட்டுனாங்க. இப்போ எல்லாருக்கும் அது பிடிச்சிருக்கு. அதேமாதிரி படத்திலும் பார்க்க பார்க்க உங்களுக்கு பிடிக்கும்” என்று வெங்கட் பிரபு பதிலளித்தார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
OPS STATEMENT: மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
OPS STATEMENT: மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
TVK Vijay Car: விஜய்யின் Lexus LM 350h கார் இத்தனை கோடியா? அப்படி என்ன இருக்குதுப்பா அந்த கார்ல!
TVK Vijay Car: விஜய்யின் Lexus LM 350h கார் இத்தனை கோடியா? அப்படி என்ன இருக்குதுப்பா அந்த கார்ல!
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
Embed widget