மேலும் அறிய

Fahadh Faasil: ஃபஹத் ஃபாசில் இல்ல, பத்து தல ராவணன்.. புகழ்ந்து தள்ளிய இயக்குநர் வசந்தபாலன்!

நடிகர் ஃபகத் ஃபாசிலை இயக்குநர் வசந்தபாலன் புகழ்ந்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வசந்தபாலன்

வெயில், அங்காடித் தெரு, ஜெயில், அநீதி எனத் தொடர்ச்சியாக எளிய மனிதர்களை தன் படங்களின் நாயகர்களாக வைத்து கதை சொல்லி வருகிறார் வசந்தபாலன். காவியத் தலைவன், அரவான் உள்ளிட்ட வரலாற்று பின்ணிகள் கொண்ட படங்களையும் இயக்கியுள்ளார். சமீப காலத்தில் வசந்தபாலன் இயக்கிய ஜெயில் மற்றும் அநீதி ஆகிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது ஓடிடியில் களமிறங்கியிருக்கிறார் வசந்தபாலன்.

ஜீ ஃபைவ்  நிறுவனம் தயாரித்து வரும் மே 17ஆம் தேதி வெளியாக இருக்கும் வெப் சீரீஸ் ‘தலைமைச் செயலகம்’. ஜெயமோகனின் கதைக்கு வசந்தபாலன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பரத், ரம்யா நம்பீசன், கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், நந்தா குப்தா, சாரா பிளாக் சித்தார்த் விபின், சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்டவர்கள் இந்த சீரிஸில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

தலைமைச் செயலகம் வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தலைமைச் செயலகம் படத்துக்கான ப்ரோமோஷன்களின் போது சமீபத்தில் வெளியான ஃபகத் ஃபாசில் நடித்த ஆவேஷம் படத்தையும் ஃபகத் ஃபாசிலையும் வசந்தபாலன் புகழ்ந்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

பத்து தல ராவணன் மாதிரி நடிக்கிறார் ஃபகத் ஃபாசில்

இந்த வீடியோவில் வசந்தபாலன் “ சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஆவேஷம் படத்தை ரொம்ப ஆசையாக திரையரங்கத்திற்கு சென்று பார்த்தேன். மிகச் சாதாரணமான ஒரு திரைக்கதையை ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்தியிருக்கிறார் ஃபகத் ஃபாசில். ஒல்லியான ஒரு தேகத்தை வைத்துக் கொண்டு பத்து தல ராவணன் மாதிரி நடிக்கிறார். ஃபகத் ஃபாசில் நடித்தாலே அந்தப் படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு அவர் வளர்ந்துவிட்டார். எந்த ரோல் கொடுத்தாலும் அதற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்கிறார். ஆவேஷம் படத்தின் வெற்றிக்கு ஃபகத் ஃபாசிலுக்கு நடிப்புக்கு பெரும் பங்கு இருக்கிறது” என்று வசந்தபாலன் கூறியுள்ளார். 

ஆவேஷம் படம் கடந்த மே 9 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகியது. திரையரங்கத்தில் ரூ.125 கோடி வசூல் செய்த இப்படம் தற்போது ஓடிடியில் வைரலாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Embed widget