மேலும் அறிய

GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்

ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 6,7,13,14,20,21 ஆகிய தேதிகளில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐஐடி சென்னை, கேட் எனப்படும் பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு (Graduate Aptitude Test in Engineering – GATE) 2027-க்கான தேதிகள், பாடத்திட்ட திருத்தம், புதிய வினாத்தாள் ஆகியவற்றை அறிவித்துள்ளது.

ஐஐட் சென்னை, 2027ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வை நடத்தும் ஒருங்கிணைப்பு கல்வி நிறுவனமாக செயல்படுகிறது.

கேட் தேர்வு எப்போது?

பல்வேறு பாடங்களில் விண்ணப்பதாரர்களின் புரிதலை மதிப்பீடு செய்யக்கூடிய கேட் தேர்வு 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 6,7,13,14,20,21 ஆகிய தேதிகளில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘கேட்’ தேர்வானது பொறியியல்/ தொழில்நுட்பம்/ அறிவியல்/ கட்டடக் கலை/ வணிகம்/ கலை/ மானுடவியல் உள்ளிட்ட இளங்கலைப்  பட்டப்படிப்புக்கான பாடங்களில் விண்ணப்பதாரர்களின் புரிதலை மதிப்பிடும்  தேசிய அளவிலான தேர்வாகும். கடந்த 1983ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘கேட்’ தேர்வு தற்போது 45-வது ஆண்டாக நடைபெறவிருக்கிறது.

விண்ணப்பப் பதிவு எப்போது?

இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, ஆகஸ்ட் மாத மத்தியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027 பிப்ரவரி 6, 7, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளன. முற்பகல், பிற்பகல் என இரு அமர்வுகளாக தேர்வுகள் நடத்தப்படும்.

இதுதொடர்பான விவரங்களுக்கு கேட் 2027க்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம் - https://gate2027.iitm.ac.in/

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

‘கேட்’ தேர்வில் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள், மத்திய கல்வி அமைச்சம், இதர அரசு முகமைகளின் ஆதரவுடன் இயங்கிவரும் பொறியியல்/ தொழில்நுட்பம்/ அறிவியல்/ கட்டடக்கலை/ மானுடவியல் போன்ற தொடர்புடைய பிரிவுகளில் நிதியுதவியுடன் கூடிய முதுகலை, நேரடி முனைவர், முனைவருக்கான பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

எதற்காக இந்தத் தேர்வு?

சில கல்லூரிகளும், கல்வி நிறுவனங்களும் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை அல்லாத மாணவர் சேர்க்கைக்கும் கேட் தேர்வு மதிப்பெண்களையே கருத்தில் கொள்கின்றன. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் பணிநியமனங்களின் போது கேட் மதிப்பெண்களைப் பயன்படுத்துகின்றன. புகழ்பெற்ற நிறுவனங்கள் பலவும் ‘கேட்’ மதிபெண்களையே ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் கருத்தில் கொள்கின்றன.

தேர்வு முறை

கணினி அடிப்படையில் நடத்தப்படும் கேட் 2027 தேர்வில், மொத்தம் 30 தேர்வுத் தாள்கள் உள்ளன. அதிகரித்து வரும் தேவைக்கேற்ப 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் திருத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் கேட் 2027ல் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன்  என்ற புதிய வினாத்தாள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜவுளிப் பொறியியல் மற்றும் ஃபைபர் அறிவியல் வினாத்தாள், பொறியியல் அறிவியல் பிரிவின் கீழ் உட்பிரிவுத் தாளாக மாற்றப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.

அனுமதிக்கப்பட்ட இரண்டு ஜோடி தேர்வுத்தாள்களில்  விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒன்றையோ அல்லது இரண்டையுமோ எழுதுவதற்கு தேர்ந்தெடுக்கலாம். விண்ணப்பதாரர்கள் பெறும் ‘கேட்’ மதிப்பெண், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கது என்று ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget