மேலும் அறிய

செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்

நடிகர் தனுஷூக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ள நிலையில் இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார்

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் சில தினங்கள் முன் அறிவிக்கப்பட்டன. இதில் ராயன் படத்திற்கு சிறந்த தமிழ் படம்  மற்றும் கேப்டன் மில்லர் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது தனுஷூக்கு அறிவிக்கப்பட்டது. விருது பரிந்துரை பட்டியலில் பல சிறந்த படங்கள் இருந்தும் ராயன் மற்றும் கேப்டன் மில்லர் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது ரசிகர்களிடையே பேசுபொருளானது. இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தற்போது பதிலளித்துள்ளார்

72 ஆவது தேசிய திரைப்பட விருது விழா கடந்த கடந்த ஜூலை 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. 2024 ஆம் ஆண்டு இந்திய மொழிகளில் வெளியான படங்களுக்கான விருதுகள் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டு தமிழ் திரைப்படங்கள் , நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பகலைஞர்களுக்கு மொத்தம் 10 விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ராயன் படத்திற்கு சிறந்த தமிழ் படம்  மற்றும் கேப்டன் மில்லர் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது தனுஷூக்கு அறிவிக்கப்பட்டது. ராயன் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய இரு படங்களும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் அவற்றுக்கு தேசிய விருது அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பேசுபொருளானது. 

நடுவராக கலா மாஸ்டர் 

இந்த ஆண்டு தேசிய விருது தேர்வு குழுவில் தமிழ்நாடு சார்பாக பிரபல நடன கலைஞர் கலா மாஸ்டர் இடம்பெற்றிருந்தார். ராயன் படத்திறு விருது அறிவிக்கப்பட்டது குறித்து அவரிடம் கேள்வி எழுந்தபோது அவர் இப்படி பதில் கூறினார். "மொத்தம் 400 படங்கள் வந்தது. ஒவ்வொரு படத்துக்கும் கடுமையான போட்டி நிலவியது. இவங்களுக்கு கொடுக்க வேண்டும், அவங்களுக்கு கொடுக்க வேண்டும் என ஒன்றுமே கிடையாது. ராயன் படத்தை தனுஷ் அவ்வளவு அழகாக இயக்கியிருந்தார். சிறந்த நடிகருக்கான தேர்வில் மம்மூட்டி, கார்த்திக் ஆர்யன், தனுஷ் என மூன்று பேருக்கும் பயங்கர போட்டி இருந்தது. அதனால் தனுஷுக்கு சிறப்பு விருதும் மற்ற இரண்டு பேருக்கு சிறந்த நடிகருக்கான விருதும் பகிர்ந்து கொடுத்தோம்.” என கலா மாஸ்டர் தெரிவித்திருந்தார்.

செல்வாக்கை பயன்படுத்தினாரா தனுஷ்? 

தனுஷ் இதற்கு முன்பாக ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான இரு விருதுகளை வென்றுள்ளார். அதே நேரம் விசாரணை திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஒரு தேசிய விருது வென்றுள்ளார். தற்போது ராயன் படத்திற்காக இயக்குநராக முதல் தேசிய விருதை வென்றுள்ளார். தனுஷ் தனது செல்வாக்கை பயன்படுத்தியே தேசிய விருதுகளை வென்றுள்ளதாக அவர் மீது சில குற்றச்சாட்டுக்களை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் முன்வைத்து வருகிறார்கள்.

கஸ்தூரி ராஜா விளக்கம் 

இது குறித்து நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார். " தனுஷூக்கு தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சிதான். தனுஷ் பயணிக்கும் வழி அவருடைய முயற்சிக்காக இந்த விருது அவருக்கு கிடைத்திருக்கிறது. இது முழுக்க முழுக்க நடுவர்களின் முடிவு தான். இதில் செல்வாக்கு எல்லாம் எதுவும் இல்லை. தனுஷை விட பெரிய நடிகர்கள் தமிழ்நாட்டில் இல்லையா. அவர்களின் செல்வாக்கை பயன்படுத்தி அவர்கள் இந்த விருதை வாங்கியிருக்கலாமே. இது முழுக்க முழுக்க நடுவர்களின் முடிவு" என கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

 

 

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Ravi Mohan: ரவிமோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டோம்.. ஆனால் மாத பராமரிப்புக்கு இல்ல.. ஆர்த்தி அம்மா கண்ணீர் பேட்டி
Ravi Mohan: ரவிமோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டோம்.. ஆனால் மாத பராமரிப்புக்கு இல்ல.. ஆர்த்தி அம்மா கண்ணீர் பேட்டி
"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Embed widget