அஜித்துடன் ரேஸ் டிராக்கில் சிறுத்தை சிவா..F1 ஸ்டைலில் ரெடியாகும் ஆவணப்படம் ?
மலேசியாவில் ரேஸ் டிராக்கில் நடிகர் அஜித்துன் இயக்குநர் சிறுத்தை சிவா காணப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது

ஐரோப்பிய GT4 கார் ரேஸிங் சீரிஸை முடித்து இந்தியா திரும்பிய அஜித் தனது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் Ak64 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க இருக்கின்றன. இதனிடையில் மலேசியாவில் நடைபெறும் மிச்லின் 12H போட்டியில் அஜித் கலந்துகொள்கிறார். இதற்காக ஒரு நாள் முன்பே அவர் மலேசியா கிளம்பிச் சென்றுள்ளார். மலேசியாவில் இயக்குநர் சிறுத்தை சிவா மற்றும் ஏ.எல் விஜய் ஆகிய இரு இயக்குநர்கள் அஜித்துடன் காணப்பட்டார்கள். அஜித்தைப் பற்றி ஆவணப்படத்தை இவர்கள் இருவரும் இயக்குவதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசியாவில் அஜித்
மலேசியாவில் மிச்செலின் 12H என்டியூரன்ஸ் கார் ரேஸிங் போட்டி டிசம்பர் 5-6 தேதிகளில் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற தகுதி சுற்றுக்கு முன்னதாக அஜித் குமார் மலேசியாவில் உள்ள செபாங் ரேஸி டிராக்கிற்கு வந்தார். ரெட் ஆண்ட் ரேசிங்குடன் கூட்டு சேர்ந்த அவரது AK ரேசிங் குழு, 21 கார்களில் IND GT3 வகுப்பில் தங்கள் Mercedes-AMG GT3 EVOவைத் தயார் செய்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாய் 24H இல் மூன்றாவது இடத்தைப் பிடித்ததிலிருந்து அஜித்தின் ரேஸ் போட்டிகளில் அதிகம் ரசிகர்கள் கலந்துகொள்கிறார்கள். அந்த வகையில் மலேசியாவில் போட்டிகளுக்கு இடையே தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களையும் அஜித் சந்தித்து வருகிறார்.
அஜித்தின் ஆவணப்படத்தை இயக்கும் சிறுத்தை சிவா
அஜித் பற்றி ஆவணப்படம் ஒன்று உருவாக இருப்பதாக கடந்த சில வருடங்களாக தகவல்கல் வெளியாகி வருகின்றன. முன்னதாக இந்த ஆவணப்படத்தை ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. கார் ரேஸிற்கு மீண்டும் திரும்புவதற்கு முன் அஜித் மோட்டர் பைக்கில் உலகம் முழுவது பயணம் செய்தார். இந்த பயணத்தையும் இணைத்து துபாயி , ஐரோப்பிய நாடுகளில் கலந்துகொண்ட போட்டிகள் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்
இந்த ஆவணப்படத்தை இயக்கவே தற்போது சிறுத்தை சிவா அஜித்துடன் பயணித்து வருவதாக கூறப்படுகிறது. வீரம் , வேதாளம் , விவேகம் , விஸ்வாசம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கியர் சிறுத்தை சிவா. சினிமா தவிர்த்து இருவருக்கும் இடையில் நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. அஜித்தைப் பற்றிய ஆவணப்படத்தை எடுக்க மிக தகுதியான நபர் சிறுத்தை சிவா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்





















