மேலும் அறிய

சமூக நல்லிணக்கம் தேவை.. மத உணர்வுகளை சிறுமைப்படுத்தாதீங்க.. சீனுராமசாமி அட்வைஸ்!

"உலகம் படைக்கப்பட்டது" என்று நம்புபவர் ஆத்திகர்; "உலகம் உருவானது" என்று நம்புபவர் நாத்திகர். ​பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள் இந்த வழிமுறையைத்தான் கடைப்பிடிப்பார்கள் என சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

சமூக நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைத்தால் எந்த மத உணர்வையும் தாக்கிப் பேசவோ கூடாது என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரு தினங்கள் முன்பு பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா கொள்கை கொண்ட நபர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தன்  கருத்தில் உறுதியாக இருந்த உதயநிதி, சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என சொன்னது ஏற்றதாழ்வுகள் இல்லாமல் சமூகத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று தான் என விளக்கமளித்தார். 

இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிந்தித்துப் பார்க்கிறேன்... ​ஒருவரை நாத்திகராக உருவாக்க வேண்டும் என்றால் அல்லது அப்படி ஒருவர் உருவாக வேண்டும் என்றால், அது விஞ்ஞானபூர்வமான தனி உரையாடல்கள், கூட்டு உரையாடல்கள் மற்றும் தத்துவப் பகிர்வுகள் மூலமாகத்தான் சாத்தியமாகும். ​

நான் மிகச் சுருக்கமாகச் சொல்வேன்: "உலகம் படைக்கப்பட்டது" என்று நம்புபவர் ஆத்திகர்; "உலகம் உருவானது" என்று நம்புபவர் நாத்திகர். ​பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள் இந்த வழிமுறையைத்தான் கடைப்பிடிப்பார்கள். ஒற்றை செல் உயிரினமான அமீபாவிலிருந்து இந்த உலகம் எப்படிப் பரிணாம வளர்ச்சி அடைந்தது என்று தத்துவங்களின் அடிப்படையில் பேசத் தொடங்கி, 'டயலெக்டிக்கல் மெட்டீரியலிசம்' (Dialectical Materialism) என்கிற இயங்கியல் வாதத்திற்கு வருவார்கள். ​

உதாரணமாக, கார்ல் மார்க்ஸ் "மதம் ஒரு அபின், ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சு" என்று சொன்னால், அதற்கான காரணத்தை தத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே பேச வேண்டும். அதேபோல, சார்லஸ் டார்வின் தன் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன்வைத்தபோது, அவர் எந்த மத நம்பிக்கையையும் நேரடியாகக் கேலி செய்யவில்லை. மாறாக, இயற்கையின் தரவுகளையும் ஆதாரங்களையும் மட்டுமே தர்க்கப்பூர்வமாக முன்வைத்தார். அதுவே ஒரு மாபெரும் அறிவுப் புரட்சிக்கு வித்திட்டது. ​

இதை விடுத்து, வெறுமனே மத வழிபாடுகளையோ, சடங்குகளையோ அல்லது மக்களின் நம்பிக்கைகளையோ கேலி செய்வதன் மூலம் ஒருவரைப் பகுத்தறிவுவாதியாக மாற்றிவிட முடியாது. ஒருவருக்கு நோய் வரும்போது, அவர் செய்யும் பிரார்த்தனையைக் கிண்டல் செய்வதை விட, மருத்துவ அறிவியலின் அவசியத்தை அவரிடம் பொறுமையாக எடுத்துரைப்பதே உண்மையான விழிப்புணர்வாக மாறும். ​மாறாக, நம்பிக்கைகளைக் கேலி செய்வது கடுமையான எதிர்விளைவுகளையே உண்டாக்கும்.

கடவுள் மீது நம்பிக்கை உள்ள ஒருவரிடம் கடவுளை நிந்தித்துப் பேசும்போது, அவர் ஒரு மதவெறியராக மாறிவிடுகிற அபாயமே இங்கு அதிகம். ​சமூக நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைக்கிறவர்கள், அதை ஆதரிக்கிறவர்கள், பகுத்தறிவு என்ற பெயரில் எந்தவொரு தனி வழிபாடுகளையோ, சம்பிரதாயங்களையோ, மத உணர்வுகளையோ சிறுமையாகப் பேசவோ, சட்டென்று நேரடியாகத் தாக்கிப் பேசவோ கூடாது.

அப்படிப் புண்படுத்தினால், சமூக நல்லிணக்கம் உண்டாகாமல் மதப் பூசல்கள்தான் பெருகும். ​புரிதல்களையும் மாற்றங்களையும் தர்க்கபூர்வமான உரையாடல்கள் மூலமாகத்தான் கொண்டுவர முடியும். இதைத்தான் விஞ்ஞானக் கழகத்தாரும், கம்யூனிஸ்டுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அதனால்தான் கம்யூனிச நாடுகளில் கூட வழிபாட்டுத் தலங்கள் தனி மரியாதையுடன் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன” என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget