மேலும் அறிய

CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!

கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது, “உங்ககிட்ட யாராவது லஞ்சம் ஏதாவது கேட்டாங்கன்னா,  கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க என வெளிப்படையாகவே கூறியது பாராட்டைப் பெற்றுள்ளது.

எதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என சொல்லும் முதலமைச்சர் விஜயின் பேச்சு எளிய மக்களின் நம்பிக்கையை தட்டி எழுப்புவதாக இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். 

தவெக ஆட்சியில் வந்த மாற்றம்

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து செயல்பட்டு வருகிறது. முதலமைச்சராக ஜோசப் விஜய் பணியாற்றி வருகிறார். தவெக ஆட்சி வந்ததில் இருந்து அனைத்து துறைகளில் பல மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் சரியான நேரத்திற்கு அலுவலகம் வர வேண்டும், மக்களை மதிக்க வேண்டும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடைமுறைகளை விளக்கி புரிதலை ஏற்படுத்த வேண்டும், லஞ்சம் வாங்கக்கூடாது, தேவையில்லாமல் அதிகாரிகள் பணி செய்வதை சொந்த கட்சியினராகவே இருந்தாலும் தடுக்கக்கூடாது என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி அமைச்சர்களும், அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். 100 சதவிகிதம் ஊழல், லஞ்சம் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாகும் என முதலமைச்சர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்களும் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர். 

லஞ்சம் கொடுக்காதீர்கள்.. என் பேரை சொல்லுங்கள்

இந்த நிலையில் கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது, “உங்ககிட்ட யாராவது லஞ்சம் ஏதாவது கேட்டாங்கன்னா,  கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க, உங்களோட நான் இருக்கேன். அப்படியே யாராவது கட்டாயப்படுத்தினார்கள் என்றால், "இது எங்க மகன், எங்க பிள்ளை, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜய், எங்க விஜியோட ஆட்சின்னு ஸ்ட்ராங்கா சொல்லுங்க” என அதிரடியாக பேசினார். 

மேலும், “லஞ்சம் எல்லாம் ஒழிக்க முடியாது, ஊழல் எல்லாம் ஒழிக்க முடியாது, அதெல்லாம் ரத்தத்தில் ஊறிப்போனது என சொன்னவர்கள் எல்லாரும் இன்றைக்கு அரசு அலுவலகங்களுக்கு சென்று பாருங்கள். ஒரு பைசா லஞ்சம் இல்லாமல் எல்லா வேலையும் உடனடியாக நடக்கிறது. அதைவிட எங்களுக்கு மரியாதை எல்லாம் கொடுக்கிறார்கள் என மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்” எனவும் முதலமைச்சர் விஜய் பேசினார். 

Also Read: TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!

சீனுராமசாமி பாராட்டு

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் கரூரில் பேசிய சில கருத்துகளை இயக்குநர் சீனு ராமசாமி வரவேற்று பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "லஞ்சம் கொடுக்காதே நான் இருக்கிறேன்". எளியோர்களின் பெருமூச்சையும் நம்பிக்கையையும் தட்டி எழுப்புகிறது மாண்புமிகு முதல்வரின் இந்த வாக்கு. ஒரு அதிகாரம் தன் குடிமக்களுக்குத் தரும் மிகச்சிறந்த பாதுகாப்பு இதுதான். ஆனால், இந்த வெளிச்சம் நிலைக்க வேண்டுமானால் நாம் மாற வேண்டும். லஞ்சம் என்பது நம் சமூகத்தின் நோய். கொடுப்பதும் வாங்குவதும் ஒன்றுதான். இதை உணர்ந்தாலே நேர்மையான பாதை தெளிந்துவிடும். ஒளி பிறக்கட்டும்” என தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget