The Goat : தி கோட் படத்துக்கு ராஜமெளலிதான் இன்ஸ்பிரேஷன்.. ஹைதராபாத் பிரஸ் மீட்டில் வெங்கட் பிரபு
தி கோட் திரைப்படத்தை எடுப்பதற்கு இயக்குநர் ராஜமெளலிதான் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
தி கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
தி கோட் படத்தில் என்ன ஸ்பெஷல்
விஜய் படங்களுக்கு எப்போதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம்தான். ஆனால் தி கோட் படத்திற்கு இதுவரை இல்லாத அளவு ஹைப் இருந்து வருகிறது. விஜய் அரசியலுக்கு வரும் நிலையில் இது அவருடைய கடைசி இரண்டு படங்களில் ஒன்று என்பது முதல் காரணம். இது தவிர்த்து இப்படத்தில் இன்னும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. இரட்டை வேடங்களில் விஜய் , டீ ஏஜிங் தொழில்நுட்பம் , வெங்கட் பிரபு மங்காத்தா கூட்டணி , ஏ.ஐ மூலம் விஜயகாந்த் கேமியோ , யுவனின் இசை என காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதுமட்டுமில்லாமல் படத்தில் இன்னும் நிறைய சர்ப்ரைஸ் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
இந்த படம் சைன்ஸ் ஃபிக்ஷன் படமா என்கிற கேள்வியும் ஒருபக்கம் இருந்து வருகிறது. முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை கடந்த ஓராண்டுகளில் விடாப்பிடியாக உழைத்து தற்போது ரிலீஸூக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் படக்குழுவினர். இது குறித்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு நேற்று ஹைதராபாதில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசினார்.
தி கோட் படத்திற்கு ராஜமெளலிதான் இன்ஸ்பிரேஷன்
”இந்த படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் மற்றும் நடிகர் விஜய்க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை நாங்கள் ஒரு வருடத்திற்குள்ளாக எடுத்து முடித்திருக்கிறோம். இதே படத்தை ஹாலிவுட்டில் எடுத்திருந்தால் அதற்கு ஒரு சில வருடங்கள் ஆகியிருக்கும் . இந்த படத்தை நம்மால் முடிந்த பட்ஜெட்டில் நம் ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாக உருவாக்கியதற்கு எனக்கு இயக்குநர் ராஜமெளலி தான் பெரிய இன்ஸ்பிரேஷன்“ என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : The Goat : உண்மையான தி கோட் திருவிழா தெலுங்கு ரசிகர்களுக்கு தான்...அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சியா?