Jailer: ’ஜெயிலர் வெற்றி பெற்றால் காரணம் விஜய் தான்’ ..கொளுத்திப்போட்ட பிரவீன் காந்தி.. கடுப்பான ரஜினி ரசிகர்கள்..
ஜெயிலர் படம் வெற்றி பெற்றால் விஜய், அஜித்துக்கு தான் , நடிகர் ரஜினிகாந்த் நன்றி சொல்ல வேண்டும் என இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் படம் வெற்றி பெற்றால் விஜய், அஜித்துக்கு தான் , நடிகர் ரஜினிகாந்த் நன்றி சொல்ல வேண்டும் என இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழில் ரட்சகன், ஜோடி, ஸ்டார், துள்ளல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரவீன் காந்தி. இவர் சில படங்களில் கேமியோ ரோலிலும் நடித்துள்ளார். இதனிடையே இவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், “ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது” பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “ஜெயிலர் படம் பல இளைஞர்களை கூலாக மாற்றும், ரஜினிக்கு எதிராக பேசுபவர்களை கொதிக்க வைக்கும் வகையில் மாற்றும். ஒரு தனியார் ஐடி நிறுவனம் லீவு விட்டதோடு, ஜெயிலர் படத்துக்கு டிக்கெட் கொடுத்துருக்காங்க. ரஜினியின் கேரியரை பொறுத்தமட்டில் படையப்பா, சந்திரமுகி, சிவாஜி போன்ற படங்கள் உலகளவில் நன்றாக ஓடியதாக சொல்வார்கள். அந்த வகையில் இந்த படம் இணையும் என நம்புகிறேன்.
ஒருவேளை ஜெயிலர் படம் பெரிய வெற்றி அடைந்தால் என்றால் ரஜினி 2 பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒன்று விஜய், மற்றொன்று அஜித். இதில் அஜித்துக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும் என கேட்டால், ”அவரது ரசிகர்கள் தான் ஜெயிலர் படத்தை தூக்கி கொண்டாட போகிறார்கள். நம்ம தலைக்கு மேல பெரிய தல என அவர்கள் கொண்டாடுவாங்க” என பிரவீன் காந்தி தெரிவித்தார்.
தொடர்ந்து விஜய்க்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும் என கூறுகிறேன் என்றால், “ரொம்ப நாள் கழிச்சி ரஜினியின் படம் வெளியாகிறது. ஒரு அஜித், விஜய் படம் வெளியானால் எப்படி இளம் வயதினரிடையே ஒரு போட்டி நிலவுமோ, அத்தகைய போட்டியை உருவாக்கியது விஜய் தான். ஆடியோ வெளியிட்டு நிகழ்ச்சியில் விஜய்யை பற்றி ரஜினி பேசாமல் இருந்திருந்தால் ஜெயிலர் படம் பெரிய அளவில் கவனிக்கப்படாமல் இருந்திருக்கும்” என இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ரஜினி ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். சமூக வலைத்தளத்தில் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
ஜெயிலர் படம் மீது எகிறும் எதிர்பார்ப்பு
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, ஜீவிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதனால் திரையரங்குகளில் ரஜினி ரசிகர்களால் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Director Mysskin: ‘விஷாலுக்கு ஈகோ அதிகம்.. படம் பண்ணலாம்ன்னு நான் கெஞ்ச மாட்டேன்’ .. இயக்குநர் மிஷ்கின் ஆவேசம்..!