மேலும் அறிய

Pa Ranjith: அம்பேத்கர் கனவை ஒரு சீடனாக நிறைவேற்றுவேன் - இயக்குநர் பா.ரஞ்சித்!

எந்த நோக்கத்திற்காக மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை தொடங்கினோமோ அது விரைவில் நனவாகும். கலை மக்களுக்கானது. அதை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை நீலம் பண்பாட்டு மையம் தொடர்ந்து செய்யும் என பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அம்பேத்கரின் கனவை நிறைவேற்றும் சீடனாக என்றும் இருப்பேன் என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். 

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒவ்வொரு ஆண்டு மார்கழி மாதம், ‘மார்கழியில் மக்களிசை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. மார்கழி மாதம் கர்நாடக சங்கீதம் தான் என்ற நிலை மாறி அனைத்து விதமான இசைகளும் இசைக்கப்படும் நிகழ்ச்சியாக இது உள்ளது. இந்த மேடை கவனிக்கப்படாத பல கலைஞர்களுக்கும் மேடையாக உள்ளது. இந்த 2025ம் ஆண்டுக்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சென்னை அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் தொடங்கியது. டிசம்பர் 28ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித், “கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த ஆதரவு ரொம்ப ரொம்ப முக்கியமானது. அதேபோல் இந்த வருடமும் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. குறுகிய காலத்தில் நம்முடைய அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் வெற்றிமாறன் என்னுடைய வளர்ச்சியிலும், தனிப்பட்ட முறையிலும் மிகப்பெரிய அக்கறைக் கொண்டவர். அதேபோல் கனிமொழி எம்.பி.,யை அவர் கவிதை எழுதும் காலத்தில் இருந்தே நல்ல பழக்கம் உள்ளது. 

சென்னை சங்கமம் நிகழ்ச்சி தான் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை நடத்த எனக்கு மிகப்பெரிய தூண்டுதலாக அமைந்தது. சமீபத்தில் எனக்கு மிகப்பெரிய அளவில் நெருங்கிய நண்பராக ஜி.வி.பிரகாஷ்குமார் மாறியுள்ளார். அவரின் அன்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார். 

அதேபோல மாநகரம் திரைப்படம் ஆரம்பிக்கும்போது என்னுடன் பேசிய லோகேஷ் கனகராஜ், இப்போது அதே அளவு அன்புடன், என்னை கவனித்துக் கொண்டே, எப்போது துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். இன்னும் நிறைய பேர் நமக்காக ஆதரவுக்கரம் நீட்டுகிறார்கள்.இது சாதாரண விஷயம் அல்ல. ஏதோ ஒரு அளவு நேர்மையாக இருப்பதால் தான் இந்த ஆதரவு கிடைப்பதாக நினைக்கிறேன். நிச்சயம் அது தொடரும். அதற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். 

எந்த நோக்கத்திற்காக மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை தொடங்கினோமோ அது விரைவில் நனவாகும். இங்கிருக்கும் நலிவடைந்த கலைஞர்கள், கவனிக்கப்படாதவர்கள்,இன்டிபென்டெண்ட் கலைஞர்கள் ஆகியோருக்கு இந்நிகழ்ச்சி ஏதோ ஒரு வகையில் ஊக்கமாக இருக்கும். கலை மக்களுக்கானது. அதை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை நீலம் பண்பாட்டு மையம் தொடர்ந்து செய்யும். பாபா சாகேப் அம்பேத்கர் வழியில் நின்று செய்யும். அவர் அரசியல் மாற்றம், சமூக மாற்றம் ஆகிய இரண்டு விஷயங்களை குறிப்பிட்டு சொன்னார். இதில் சமூக மாற்றம் பண்பாட்டின் மூலம் கொண்டு வர முடியும் என அவர் தீவிரமாக நம்பினார். அப்படியாக அம்பேத்கரின் கனவை நனவாக்கும் சீடனாக நான் என்றைக்கும் இருப்பேன்" என  தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Embed widget