Naveen On Paarisaalan : 'நித்தி கூட ஓகே... இந்த தத்தியை குணப்படுத்த முடியாது..' பாரிசாலனை பொளந்துக்கட்டிய இயக்குநர் நவீன்..!
யூடியூப் பக்கத்தில் இழுமினாட்டி என்று அவ்வபோது ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பும் பாரிசாலன் என்பவர் தற்போது பீஸ்ட் பாடல் வரிகள் குறித்து பயங்கரமான பூதத்தை கிளப்பி இருக்கிறார்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ள இந்தப்படத்தின் பின்னணி வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் முன்னதாக தொடங்கிய நிலையில் அண்மையில் படத்திலிருந்து, ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் வீடியோவாக, அரபிக்குத்து பாடல் வெளியிடப்பட்டது.
யூட்யூபில் வெளியான இப்பாடல், 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தி இருக்கிறது. பிப்ரவரி 14-ம் தேதி வெளியான இப்பாடல் 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. வெளியானவுடன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இந்த பாடல், இன்ஸ்டா ரீல்ஸ்களிலும், வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்களிலும் ஒலிக்க தொடங்கியது. 4 நாட்களில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 14 நாட்களில் 100 மில்லியன், அதாவது 10 கோடி பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. மேலும், 30 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.
இந்தநிலையில், யூடியூப் பக்கத்தில் இழுமினாட்டி என்று அவ்வபோது ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பும் பாரிசாலன் என்பவர் தற்போது பீஸ்ட் பாடல் வரிகள் குறித்து பயங்கரமான பூதத்தை கிளப்பி இருக்கிறார். அதில், ஊருக்கே தெரியும் அரபிக் குத்து பாடலை எழுதியது நடிகர் சிவகார்த்திகேயன் என்று. ஆனால், அதை சிவகார்த்திகேயன் எழுதவில்லையாம். காசு கொடுத்து யாரையோ எழுத வைத்துவிட்டு அதுக்கு சிவகார்த்திகேயன் பெயரை போட்டுகொண்டதாக தெரிவித்துள்ளார்.
நாம அல்லி வீசுனா நம்பறதுக்கு முட்டாக்ஸ் இருக்கானுங்கனு சலனமேயில்லாம அடிச்சுவுடுற நித்யானந்தா மாரி கீரிமினல் மைண்டெல்லாம் இல்ல இந்த தம்பிக்கு. இது பெனாத்தறத இதுவே நம்புது. இந்த மனநோய்க்கு ‘psychosis’ ‘delusional paranoia’னு பேரு. குணப்பந்த்தறது சிரமம்தான்
— Naveen Mohamedali (@NaveenFilmmaker) February 27, 2022
pic.twitter.com/3UQE8NvckN
இதுகூட பரவாயில்லை, அடுத்ததாக, ஒஹ் க்யூடி, பியூட்டி, ஸ்வீட்டி என்று வார்த்தைகள் பழங்கால ஈட்டியை குடிக்கிறது என்றும், நடிகர் விஜய் மற்றும் பூஜா கைகளை விரித்து ஆடுவது சமணர்களை குறிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் சமண சித்தர்களை உச்சியான மரத்தில் குத்தி சித்திரவதை செய்வார்கள். அதேயே பாடல்கள் மூலம் சொல்லாமல் சொல்லுகிறார்கள் என்று பாரி சாலன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
இதற்கு பலரது தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பி வந்தது. தற்போது மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாரிசாலன் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், நாம அல்லி வீசுனா நம்பறதுக்கு முட்டாக்ஸ் இருக்கானுங்கனு சலனமேயில்லாம அடிச்சுவுடுற நித்யானந்தா மாரி கீரிமினல் மைண்டெல்லாம் இல்ல இந்த தம்பிக்கு. இது பெனாத்தறத இதுவே நம்புது. இந்த மனநோய்க்கு ‘psychosis’ ‘delusional paranoia’னு பேரு. குணப்பந்த்தறது சிரமம்தான் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது, இந்த ட்வீட் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்