Director Mani Nagaraj Death: ‛பென்சில்’ பட இயக்குநர் திடீர் மரணம் ...ரசிகர்கள் அதிர்ச்சி!
Director Mani Nagaraj Passed Away: மணி நாகராஜ் பிரபல கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்...
பென்சில் படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் உடல்நலக்குறைவால் மரணமடைந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான படம் “பென்சில்”. இந்த படத்தை மணி நாகராஜ் இயக்கியிருந்தார். விமர்சன ரீதியாக பென்சில் படம் பாராட்டைப் பெற்ற நிலையில் அடுத்ததாக வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
View this post on Instagram
மாஸ்டர் படத்தைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ எஸ்தர் எண்டர்டெய்னர் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறார். அதில் ஒன்றாக வாசுவின் கர்ப்பிணிகள் படம் உருவாகி வருகிறது. ஒரு மருத்துவர் தான் சந்திக்கும் வித்தியாசமான 4 கர்ப்பிணிகள் பற்றிய கதையும், அதற்கான தீர்வுகளும் இப்படத்தின் கதையாக இடம் பெற்றுள்ளது.
#ManiNagaraj | ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பென்சில் திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் காலமானார் https://t.co/eHJa4kihwP
— Balaji Duraisamy (@balajidtweets) August 25, 2022
மருத்துவர் கதாபாத்திரத்தில் நீயா நானா கோபிநாத் நடிக்க, 4 கர்ப்பிணிகளாக அனிகா, சீதா, வனிதா விஜயகுமார், லீனா குமார் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
Hard to believe My beloved friend director Mani Nagaraj is no more. My deepest condolences to the bereaved family and Friends. Rest in Peace my friend
— G.V.Prakash Kumar (@gvprakash) August 25, 2022
இந்நிலையில் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக காலமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.