Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள் கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
கூலி திரைப்படத்தின் காட்சிகள் கசிந்துள்ளது குறித்து படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையதளத்தில் கசிந்துள்ளது குறித்து படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் கூலி. இப்படத்தில் நாகர்ஜூனா , உபேந்திரா , செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஹைதராபாதில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பின் சென்னையில் நடைபெற்றது. தற்போது விசாகபட்டினம் ஹார்பரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது
இணையத்தில் கசிந்த கூலி படக் காட்சிகள்
கூலி படத்தின் படபிடிப்பு காட்சிகள் தற்போது இணையதளத்தில் கசிந்துள்ளன. நடிகர் நாகர்ஜூனாவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தபோது அதனை படப்பிடிப்பு தளத்தில் செல்ஃபோனில் யாரோ வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். வழக்கமான லோகேஷ் கனகராஜ் படத்தின் வில்லன்கள் செய்வது போல் நாகர்ஜூனா கொடூரமாக ஒருவரை குத்திக் கொல்லும் காட்சி வீடியோவாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வரும் நிலையில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
"தனது எக்ஸ் பக்கத்தில் அவர் " கடந்த இரு மாதங்களாக பலரது கடின உழைப்பு ஒரு வீடியோவால் அபத்தமாகிவிட்டது". என தனது பதில் கூறியுள்ளார் .
இந்த மாதிரியான செயற்பாடுகளில் யாரும் ஈடுபட வேண்டாம் அது முழுமையான அனுபவத்தை கெடுக்கிறது என்று லோகேஷ் தெரிவித்துள்ளார்.