Lokesh Kanagaraj: ரஜினி படம் பார்த்து அழுதேன்... இப்பவரைக்கும் மறக்க முடியாது...லோகேஷ் கனகராஜ் சொன்ன ரகசியம்!!
ரசிகர்களில் ஒருவர், அவரிடம் விஜய், கமல் படங்களின் தியேட்டர் அனுபவங்களை சொன்னீர்களே, சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களில் மறக்க முடியாத அனுபவம் குறித்து கேட்டார்.
நடிகர் ரஜினிகாந்தின் படங்களை தியேட்டரில் கண்டிப்பாக பார்த்துவிடுவேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து கார்த்தியுடன் கைதி, நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் மாஸ்டர், நடிகர் கமல்ஹாசனுடன் விக்ரம் ஆகிய படங்களில் இணைந்ததன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தார்.
Hey guys ✨
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 1, 2022
I'm taking a small break from all social media platforms...
I'll be back soon with my next film's announcement 🔥
Till then do take care all of you..
With love
Lokesh Kanagaraj 🤜🏼🤛🏼
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய்யுடன் தளபதி 67, கார்த்தியுடன் கைதி-2, கமலுடன் விக்ரம்-3 ஆகிய படங்களை அடுத்தடுத்து இயக்கவுள்ளார். இதனால் லோகேஷ் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக மாறியுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் தனது சமூக வலைத்தள கணக்குகளில் இருந்து அவர் விலகினார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போவதாகவும், என்னுடைய அடுத்த படத்தின் மூலம் மீண்டும் திரும்பி வருவேன் என தெரிவித்திருந்தார். மேலும் அடுத்த படத்தின் மீது கவனம் செலுத்தவே தான் இப்படி ஒரு முடிவு எடுத்ததாக குறிப்பிட்டார்.
#LokeshKanagaraj about #thalaivar movies theatre experience#jailer #Rajinikanth𓃵 pic.twitter.com/QtTun5xEQ2
— RAJ (@jailer_2000) August 11, 2022
இதனிடையே நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்ட ரசிகர்களில் ஒருவர், அவரிடம் விஜய், கமல் படங்களின் தியேட்டர் அனுபவங்களை சொன்னீர்களே, சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களில் மறக்க முடியாத அனுபவம் குறித்து கேட்டார். அதற்கு ரஜினிகாந்தின் படங்களை தியேட்டரில் கண்டிப்பாக பார்த்துவிடுவேன் என்றும், 11 ஆம் வகுப்பு படிக்கும் போது பாபா படம் வந்தது என நினைக்கிறேன். அதனைப் பார்க்க ஹாஸ்டல் சுவர் ஏறி குதித்து படம் பார்த்த நியாபகம் இருக்கிறது. அதேபோல் முத்து படத்தில் விடுகதையா பாட்டு வரும் போது அழுதிருக்கிறேன். கடைசியாக ரஜினி நடித்த அண்ணாத்த படம் வரை முதல் காட்சி பார்த்திருக்கேன். சொல்லவா வேண்டும் முதல் நாள் என்ன நடக்குதுன்னே தெரியாது. 2வது முறையாக சென்று பார்க்கும் போது தான் படத்தின் கதை என்னென்னே எனக்கு தெரியும் என லோகேஷ் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்