(Source: ECI/ABP News/ABP Majha)
'விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை' - சிறை தண்டனை குறித்து ஓபனாக அறிக்கை விட்ட லிங்குசாமி!
நேற்று உத்தரவு பிறப்பித்த 3வது விரைவு நீதிமன்றம், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2014ல் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் "எண்ணி ஏழு நாள்" படத்தை தயாரிப்பதற்காக, நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக இயக்குனர் லிங்குசாமி கடனாக பெற்றுள்ளார். அப்போது கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலைக்கு லிங்குசாமி வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பியதால் பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த 3வது விரைவு நீதிமன்றம், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ள லிங்குசாமி,
''இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னை பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் இன்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாங்கள் இன்று மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல் முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Director @dirlingusamy press release for his case! #Lingusamy #TheWarriorr #directorlingusamy pic.twitter.com/wweQHhGBQG
— ஆதிரா (@Priya_aathira) August 22, 2022
ஆனந்தம் திரைப்படம் மூலமாக சினிமாவில் இயக்குநராக களமிறங்கியவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் வெளியான சண்டைக்கோழி இன்றளவும் பலருக்கும் பிடித்தமான திரைப்படம். ஆனால் அடுத்தடுத்த படங்கள் லிங்குசாமிக்கு கைகொடுக்கவில்லை. சூர்யா நடிப்பில் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சான் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் அடிவாங்கியது. அதேபோல் சண்டைக்கோழி 2 திரைப்படமும் லிங்குசாமிக்கு சறுக்கியது. அதன்பின்னர் லிங்குசாமி சிறிது கேப் விட்ட நிலையில் வெற்றிப்படம் ஒன்றை கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார்.
View this post on Instagram
இந்நிலையில்தான் தி வாரியர் படத்தை அவர் இயக்கினார். தெலுங்கின் ராம் பொத்தனேனி, கிருத்தி ஷெட்டி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகி படுதோல்வி அடைந்தது.