Crime : ஆபாச காட்சிகளில் நடிக்க சொல்லி மிரட்டல்.. போலீசுக்கு சென்ற இளைஞர்.. கைதான பெண் இயக்குநர்...
கேரளாவில் ஆபாச வெப் சீரிஸில் நடிக்க மிரட்டியதாக பெண் இயக்குநர் மீது இளைஞர் ஒருவர் புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஆபாச வெப் சீரிஸில் நடிக்க மிரட்டியதாக பெண் இயக்குநர் மீது இளைஞர் ஒருவர் புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த லட்சுமி தீப்தா என்ற பெண் இயக்குநராக உள்ளார். இவர் நான்ஸி, பால் பாயாசம், செலின்ற டியூசன் கிளாஸ் உள்ளிட்ட 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான அடல்ட் வெப் சீரிஸ்களை இயக்கியுள்ளார்.இவர் மீது திருவனந்தபுரத்தில் உள்ள வெங்கனூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அருவிக்கரை போலீசில் புகாரளித்தார். அதில், இயக்குநர் லட்சுமி தீப்தா தனக்கு சினிமாவில் நடிக்க வைப்பதாக லட்சுமி தீப்தா கூறியிருந்தார்.
நானும் அதற்கு சம்மதித்து அருவிக்கரை பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார். அங்கு சில காட்சிகளை தன்னை ஆபாசமாக நடிக்க சொன்னார். மேலும் அங்கிருந்த சிலரின் மிரட்டலால் நானும் வேறு வழியின்றி நடித்ததாக தெரிவித்திருந்தார். மேலும் தான் நடித்த காட்சிகள் வெளியிடப்பட்டால் என் எதிர்காலம் பாதிக்கும் என கூறியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய அருவிக்கரை போலீசார் லட்சுமி தீப்தாவை கைது செய்தனர்.
நெடுமங்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வரும் 6 வாரங்களில் புதன், வியாழக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை காவல்துறையினர் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென கூறி நீதிபதிகள் ஜாமீன் வழங்கினர்.
தலைகாட்ட முடியவில்லை
ஏற்கனவே லட்சுமி தீப்தா மீது இதேபோன்று புகார்கள் வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சுமியின் வெப் சீரிஸ்கள் அனைத்தும் அந்தரங்க காட்சிகள் நிறைந்தவை. அவரின் பால் பாயாசம் தொடரில் நாயகியாக கதீஜா ஷெரீப் நடித்திருந்தார். ஆனால் அந்த வெப் சீரிஸ் வெளியான பிறகு தான் அது ஒரு 18+ கதை என தெரிய வந்ததாகவும், அதில் நடித்தால் மலப்புரத்தில் வசித்து வந்த தன்னால் வெளியே தலைக்காட்ட முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.
மேலும் ஆபாச படத்தில் கட்டாயப்படுத்தி நடிக்க வற்புறுத்தியதாகவும், வேண்டாம் என்று சொல்லியும் தன்னுடைய அந்தரங்க காட்சிகளை வெளியிட்டதாகவும் ஒரு பெண் போலீசில் புகார் அளித்திருந்தார். இப்படியான நிலையில் இளைஞர் ஒருவர் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.