மேலும் அறிய

சொந்தக்காரனுங்கள நடிக்கவிடக்கூடாது..அப்பாவின் நடிப்பைப் பார்த்து கடுப்பான கார்த்திக் சுப்பராஜ்

தன்னை நடிக்க வைத்ததற்காக தனது மகன் கார்த்திக் சுப்பராஜ் வருத்தப்பட்டதாக அவரது தந்தை கஜராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தந்தை கஜராஜ். தனது மகன் இயக்குநரானப்பின் அவரது படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி இன்று பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜின் முதல் படமான பீட்சா படத்தில் ஒரு சிறிய போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தனது நடிப்பு தனது மகனுக்கு பிடிக்கவில்லை என்றும் தன்னை நடிக்க வைத்ததற்காக தனது மகன் ரொம்ப வருத்தப்பட்டதாகவும் கஜராஜ் சித்ரா லட்சுமணனின் பேட்டியில் கூறியுள்ளார். 

நாளை இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது குறும்படங்கள் மூலம் பெரியளவில் கவனமீர்த்தவர் கார்த்திக் சுப்பராஜ். 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே அமோக வெற்றிபெற அடுத்தடுத்து ஜிகர்தண்டா , பேட்ட , மஹான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் , ரெட்ரோ , என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் படங்களில் அவரது தந்தை கஜராஜை ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நாம் நிச்சயம் பார்க்கலாம். கார்த்திக் சுப்பராஜ் மற்றும் அவரது தந்தை இருவரும் தீவிர ரஜினிகாந்த் ரசிகர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. பேட்டி ஒன்றில் தனது மகன் இயக்கிய படங்களில் நடித்தது குறித்து அவர் விரிவாக பகிர்ந்துகொண்டுள்ளார். தனது முதல் படத்தில் தனது நடிப்பை பார்த்து அதிருப்தியடைந்த மகன் இன்னொரு படத்தில் தனது நடிப்பை பாராடியதாகவும் அவர் இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அப்பாவின் நடிப்பை பார்த்து கடுப்பான கார்த்திக் சுப்பராஜ் 

சித்ரா லட்சுமணன் உடனான பேட்டியில் பேச்ய கஜராஜ் " என் மகன் குறும்படம் இயக்கிவந்தபோதே சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். முதல் படத்தை அவன் இயக்கப்போகிறான் என்று தெரிந்தபோதே ஏதாவது ஒரு சின்ன ரோல் தரும்படி கேட்டுக்கொண்டே. பீட்சா படத்தில் ஒரு சிறிய போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தேன். நான் கேட்டேன் என்று எனக்கு ரோல் கொடுத்தாலும் என்னை அந்த படத்தில் நடிக்க வைத்ததற்காக அவன் ரொம்ப வருத்தப்பட்டான். இனிமேல் சொந்தக்காரர்களை படத்தில் நடிக்க வைக்கக் கூடாது என்று சொன்னான்.  இது உன்னுடைய படம் . இதில் இன்னொருவர் பணம் போடுகிறார்கள். நான் நன்றாக நடிக்காததால் உன் படம் கெட்டுப்போகக் கூடாது அதனால் விருப்பமில்லை என்றால் என்னை நடிக்க வைக்கவேண்டாம் என்று தெளிவாக அவனிடம் சொல்லிவிட்டேன். ஜகமே தந்திரம் படத்தில் நடித்தபோது ஒரு பெரிய சீனை ஒரே டேக்கில் நடித்து முடித்தேன். அந்த காட்சியில் நான் சிறப்பாக நடித்திருப்பதாக என் மகன் என்னை பாராட்டினான். " என்று அவர் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget