மேலும் அறிய

Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜை ஏன் கட்டாயம் சேர்த்திருக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை கீழே காணலாம்.

இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உலா வருபவர் முகமது சிராஜ். பும்ராவிற்கு நிகரான ஒரு வீரரான சிராஜ் சமீபகாலமாக இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. 

பறிபோன வெற்றி:

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும் மிட்செல் - பிலிப்ஸ் ஜோடி இந்திய வெற்றி வாய்ப்பை பறித்தது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு பந்துவீச்சு 5வது நாளின் பிற்பாதியில் பெரியளவில் எடுபடாததும் காரணமாக அமைந்தது.

இந்திய அணி இந்த போட்டியைப் பொறுத்தமட்டில் பும்ரா, ஆகாஷ்தீப், அன்சுல் கம்போஜ், பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 பேரை பிரதான பந்துவீச்சாளராக கொண்டு களமிறங்கியது. ஆனால், அனுபவமிகுந்த முகமது சிராஜையும், ஜடேஜாவையும் பெஞ்சில் உட்கார வைத்தனர்.

குறிப்பாக, வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் இந்த மைதானத்தில் சிராஜை களமிறக்காததற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. 

வெளிநாட்டு மண்ணில் எப்படி?

முகமது சிராஜ் இதுவரை 48 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 144 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் முகமது சிராஜ் வெளிநாட்டு மண்ணில் மட்டும் 108 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

முகமது சிராஜ் எந்தெந்த நாடுகளில் எத்தனை டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்று  கீழே காணலாம்?

1. ஆஸ்திரேலியா - 33 விக்கெட்டுகள் (8 டெஸ்ட்)

2. வங்கதேசம்  - 6 விக்கெட்டுகள் ( 2 டெஸ்ட்)

3. இங்கிலாந்து - 46 விக்கெட்டுகள் (11 டெஸ்ட்)

4. தென்னாப்பிரிக்கா - 12 விக்கெட்டுகள் ( 4 டெஸ்ட்)

5. இலங்கை - 4 விக்கெட்டுகள் ( 2 டெஸ்ட்)

6. வெஸ்ட் இண்டீஸ்  - 7 விக்கெட்டுகள் ( 2 டெஸ்ட்)

கொந்தளிக்கும் ரசிகர்கள்?

இவர் மொத்தமாக ஆடியுள்ள 48 டெஸ்ட் போட்டிகளில் வெளிநாடுகளில் மட்டும் 29 டெஸ்ட் போட்டிகள் வெளிநாடுகளில் ஆடியுள்ளார். அதில் மட்டும் அவர் 108 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜாம்பவான் அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை அவர்கள் நாட்டிலே தடுமாற வைத்த திறமையான பந்துவீச்சாளரான நியூசிலாந்து மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆடவில்லை. 

அவர் இந்த போட்டியில் விளையாடியிருந்தால் கண்டிப்பாக இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், வெளிநாட்டு மண்ணில் திறமையாக பந்துவீசும் முகமது சிராஜை பெஞ்சில் உட்காரவைத்தது ஏன்? என்றும் இந்திய அணி நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். முகமது சிராஜ் டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடுவதற்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. முகமது சிராஜ் கடைசியாக இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடினார். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
IND vs NZ 1st Test:
IND vs NZ 1st Test: "போச்சு.. எல்லாம் போச்சு.." இந்திய வெற்றியில் மண்ணை அள்ளிப்போட்ட பிலிப்ஸ் - மிட்செல்!
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
IND A vs PAK A: 314 ரன்கள் டார்கெட் வைத்த பாகிஸ்தான்.. அடுத்தடுத்து பறிபோன 2 விக்கெட்டுகள்! சேசிங் செய்யுமா இந்தியா?
IND A vs PAK A: 314 ரன்கள் டார்கெட் வைத்த பாகிஸ்தான்.. அடுத்தடுத்து பறிபோன 2 விக்கெட்டுகள்! சேசிங் செய்யுமா இந்தியா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
Karthigai Deepam:
Karthigai Deepam: "அண்ணாமலையாருக்கு அரோகரா.." நாளை கார்த்திகை தீபம்! தி.மலையில் குவிந்த பக்தர்கள்!
IND vs NZ 1st Test:
IND vs NZ 1st Test: "போச்சு.. எல்லாம் போச்சு.." இந்திய வெற்றியில் மண்ணை அள்ளிப்போட்ட பிலிப்ஸ் - மிட்செல்!
Bisleri Water: ”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
Bisleri Water: ”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
Safest SUV: ”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
Embed widget