‛எங்கடா அவன்... ’ என கேட்ட பாரதிராஜா; காலில் விழுந்த சேரன்: ட்விட்டரில் தவமிருக்கும் ரசிகர்கள்!
Cheran Meets Bharathiraja: சேரனின் பதிவைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள் மீண்டும் வெற்றிக்கொடி கட்ட வேண்டும் என அந்த நாளுக்காக நாங்கள் தவமாய் தவமிருக்கிறோம் என்று கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்சினிமாவில் மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தும் இரு இயக்குனர் இமயங்களான பாரதிராஜாவும்-சேரனும் சந்தித்த நிகழ்வு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இருவரையும் பாராட்டி மகிழ்கின்றனர்.
இன்றைக்கும் பல வித்தியாசமான கிராமங்களைப்பார்க்கும் போதெல்லாம் எப்படி இது இயக்குனர் இமயமான பாரதிராஜா கண்களுக்கு தெரியவில்லை என்ற வார்த்தைகளைக் கூறாதவர்கள் இருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு ஒவ்வொரு சினிமாவிலும் கிராமங்களின் கலைகளையும், கலாசாரத்தையும் தனக்கே உரிய பாணியில் திரை வடிவமாக மக்களுக்குக் கொண்டுவரும் சிறப்பு மிக்கவராய் திகழ்ந்தவர் தான் நம் பாரதிராஜா. இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் தற்போது கொடிக்கட்டி பறக்கும் பல சினிமா நட்சத்திரங்களை உருவாக்கியவரும் இவர் தான் என்று கூற வேண்டும். அப்படி அனைவரின் நெஞ்சிலும் நீங்க மற இருப்பவரான பாரதிராஜா அவர் பார்த்து வளர்ந்த கலைஞரை எப்போதும் கைவிடமாட்டார். அதோடு தோல்வியுற்றவர்களை கைப்பிடித்து கரைச்சேர்க்க முயல்வார் என்று திரையுலகத்தினர் கூறுவார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் சில தினங்களுக்கு முன்பாக நிகழ்ந்துள்ளது. இயக்குனர், நடிகர் என அனைவராலும் பாராட்டினைப்பெற்ற சேரனுக்கு பாரதிராஜாவிடம் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.“ நான் தான் பாரதிராஜா பேசுகிறேன் என தழுதழுத்த குரல். என்னப்பா என்று பதட்டத்துடன் கேட்க, ஆட்டோகிராப் பார்க்கிறேன்“… எங்கடா அந்த சேரன் நீ திரும்பி வரனும் என பேசியுள்ளார். இதனையடுத்து உடனடியாக இதோ வந்துட்டேன் என்று அவர் இல்லம் நோக்கி சென்று ஆசிர்வாதம் பெற்றேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் தனது மனநிலையை பதிவிட்டு வந்திருந்தார் சேரன்.
காலை பாரதிராஜா அப்பாவிடமிருந்து அழைப்பு.. எடுத்து பேசுகிறேன்.. அவர் குரல் தழுதழுக்கிறது. "என்னப்பா" என சற்று பதட்டம் . ஆட்டோகிராஃப் பார்க்கிறேன்.. எங்கடா அந்த சேரன்... நீ திரும்ப வரணும்டா என அக்கறையோடு சொல்கிறார். இதோ வந்துட்டேன்ப்பா என அவர் இல்லம் சென்றேன்.. ஆசீர்வதித்தார்.. pic.twitter.com/LGEUbMMMYu
— Cheran (@directorcheran) August 31, 2021
சிங்கம் படுத்திருப்பது போலவே இருக்கிறார் இமயம் 🥰
— suguna (@SugnaSuguna718) September 1, 2021
எப்போதும் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் சேரனின் இந்த பதிவைப்பார்த்த அவரது ரசிகர்கள் நீங்கள் எப்போதும் போல மீண்டும் வெற்றிக்கொடி கட்ட வேண்டும் எனவும் அந்த நாளுக்காக நாங்கள் தவமாய் தவமிருக்கிறோம் என்று கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என அனைத்திலும் கொடிக்கட்டி பறந்த சேரனின் வாழ்வில் சில தொய்வுகள் ஏற்பட்டாலும் நிச்சயம் அவர் வெற்றிவாகை சூடுவார் எனவும் “மேலும் அன்றாட நிகழ்வுகளின் கால கண்ணாடியாக விளங்கும் வெற்றி பட இயக்குனர் அண்ணா திரு. சேரன் இருவரின் சந்திப்பு மகத்தானது என டிவிட்டர் பதிவிட்டுவருகின்றனர்.