மேலும் அறிய

Anurag Kashyap: ஷாருக்கானை இயக்க மாட்டேன்...அவரது ரசிகர்கள் தான் பிரச்சினை.. அனுராக் காஷ்யப் ஓப்பன் டாக்!

ஷாருக்கானை வைத்து தான் ஏன் படம் இயக்க விரும்பவில்லை என்று விளக்கமளித்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.

ஷாருக்கான வைத்து தான் படம் எடுக்காததற்கு காரணம் அவரது ரசிகர்கள் தான் என்று கூறியுள்ளார் இயக்குநர் அனுராக் கஷ்யப்.

அனுராக் கஷ்யப்

Gangs Of Wasseypur 1, 2, Girl on yellow boots, Dev D , Ugly உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அனுராக் கஷ்யப். மாறுபட்ட கதைக்களங்கள், எதார்த்தத்திற்கு நெருக்கமான அணுகுமுறை, தனித்துவமான காட்சியமைப்புகள் என தனக்கென தனி அடையாளங்களைக் கொண்டவர் இயக்குநர் அனுராக் கஷ்யப்.

இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் இவரது படங்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன. பாலிவுட் சினிமாவில் இருந்துகொண்டே பாலிவுட்டை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் தனது படங்களை வெளியிடுவதற்கு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார் அனுராக் கஷ்யப்.

ஷாருக் கானுடன் என்னால் வேலை செய்ய முடியாது

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஷாருக் கான் போன்ற பெரிய நடிகர்களை வைத்து தான் ஏன் படங்கள் எடுப்பதில்லை என்கிற கேள்விக்கு பதில் அளித்த அனுராக் கஷ்யப் இப்படி கூறியிருக்கிறார். “நான் ரன்பீர் கபூரை வைத்து பாம்பே வெல்வட் என்கிற படத்தை எடுத்தேன். அந்தப் படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. ஷாருக்கானை வைத்து நான் ஒரு படம் எடுத்தேன் என்றால் அதற்கும் பாம்பே வெல்வட் படத்திற்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும். அது என்னை மூழ்கடித்துவிடும். ஷாருக் கானை இயக்குவது எனக்கு ஒரு மிகப்பெரிய கனவாக இருக்கிறது. அது அப்படியே இருந்துவிட்டு போகட்டும். “ என்று அவர் கூறினார்

ஷாருக் கானுடன் எந்த பிரச்சனையும் இல்லை

”நான் ஷாருக் கானுடம் வேலை செய்யாததற்கு எந்த வித தனிப்பட்ட காரணமும் இல்லை. ஷாருக் கான் என்பவர் ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர். எனக்கு அவரின் ரசிகர்கள் தான் பிரச்சனை. ரன்பீர் கபூரின் ரசிகர்களைப் போலவே ஷாருக் கானின் ரசிகர்களுக்கும் குறிப்பிட்ட எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.  பெரிய நடிகர்களுக்குப் பின் பெரியளவிலான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாவிட்டால் அவர்கள் உங்களை நிராகரித்து விடுவார்கள். நான் என்னுடையப் படங்களில் தொடர்ந்து ஏதோ ஒன்றை புதிதாக செய்ய முயற்சி செய்கிறேன் . அதிக அளவிலான ரசிகர்கள் உங்களை புதிதாக எதுவும் செய்ய விடமாட்டார்கள். அப்படியான வாய்ப்பை நானே அவர்களுக்கு தர விரும்பவில்லை. முதலில் நால் நிராகரிக்கப்படுவேன் பின் எனது படத்தில் நடித்து நடிகர் தூக்கி வீசப்படுவார். இதனால் நான் அதில் இருந்து விலகியே இருக்கிறேன்“ என்று அவர் கூறினார்.

ஜவான்

அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படூகோன்,யோகி பாபு, சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கி அனிருத் இசையமைத்து கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது . ஜவான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget