வெற்றிமாறன் சாருக்கு 1000 நன்றி சொன்னாலும் பத்தாது..நடிகர் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி
ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வாய்ஸ் ஓவர் கொடுத்ததற்காக அவருக்கு ஹரிஷ் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார்

டீசல்
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படம் டீசல். அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா, அபூர்வ சிங் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். திபு நினன் தாமஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் கல்யாண் நடித்து கடந்த ஆண்டு வெளியான பார்க்கிங் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்பெற்றதுடன் 3 தேசிய விருதுகளை வென்றது. தற்போது தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் டீசல் திரைப்படமும் குறிப்பிடத் தகுந்த கவனத்தை ஈர்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .
வெற்றிமாறனுக்கு நன்றி சொன்ன ஹரிஷ் கல்யான்
"வெற்றிமாறன் சாருக்கு எவ்வளவு கோடி நன்றி சொன்னாலும் பத்தாது. இந்தப் படத்தைப் பற்றி சுருக்கமாகச் சொல்கிற மாதிரியான ஒரு வாய்ஸ் ஓவரைக் கொடுத்திருக்கிறார். அதை வெற்றிமாறன் சார் பேசினால் ரசிகர்களுக்கு சரியாக போய்ச் சேரும் என்று அவரிடம் கேட்டோம். அவர் முதலில் படத்தைப் பார்த்தால்தான் என்னால் பேச முடியும் என்று சொல்லி முழுப்படத்தையும் பார்த்தார். அவர் நினைத்திருந்தால் ஒரு அரை மணி நேரத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்துவிட்டு போயிருக்க முடியும். ஆனால், முழுப் படத்தையும் பார்த்துவிட்டு சில suggestions கொடுத்தார். லவ் யூ வெற்றி சார்!" - ஹரிஷ் கல்யாண்
#HarishKalyan about #Vetrimaraan Voice over
— Movie Tamil (@_MovieTamil) October 15, 2025
- We thought that if Vetrimaaran sir gave the voice-over, it would be even better.
- But Vetrimaaran sir said that he could decide whether to give the voice-over only after watching the film.#Dieselhttps://t.co/yjxnGKM5WU





















