Shankar : இனி வாழையைப் பார்த்தால் இந்த நியாபகம்தான் வரும்.. இயக்குநர் ஷங்கர் வாழ்த்து
மாரி செல்வராஜ் இயக்கிய வாழைத் திரைப்படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்
வாழை
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாழை படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் ராம் , பா ரஞ்சித் , சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன் , நிகிலா விமல் , ஜே சதிஷ் குமார் , திவ்யா துரைசாமி , ஜானகி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படம்போலவே திருநெல்வேலியே இந்த படத்திற்கும் கதைக்களம். பள்ளி சிறுவனான சிவனைந்தம்தான் கதையின் நாயகன். கதையின் நாயகனான சிவனைந்தமும், அவரது நண்பன் சேகரும் பள்ளி விடுமுறை நாட்களில் வாழை தார் சுமக்கும் வேலைக்குச் செல்கிறார்கள்.
வாழைத் தார் சுமக்கும் பணிக்கு வேண்டா வெறுப்புடன் செல்லும் சிவனைந்தத்தின் பள்ளி பருவத்தையும், அவனது குடும்ப சூழலையும், அவனது ஆசைகளையும், அவன் வாழைத் தார் சுமக்கும் பணிக்குச் செல்லாத அந்த ஒரு நாளில் நிகழும் சம்பவம் என்ன? என்பதையும் மிக மிக தத்ரூபமாக படமாக்கியுள்ளார் மாரிசெல்வராஜ்.
இயக்குநர் ஷங்கர் வாழ்த்து
வாழை திரைபடத்தை பார்த்துவிட்டு இதயத்திலிருந்து வாழ்த்திய இயக்குனர் திரு . @shankarshanmugh sir அவர்களுக்கு எங்கள் நன்றியும் ப்ரியமும் ❤️❤️❤️ ✨ #VaazhaiRunningSuccesfully #Vaazhaimovie pic.twitter.com/zHVbrfuEkq
— Mari Selvaraj (@mari_selvaraj) August 25, 2024
வாழை திரைப்படத்தைப் பார்த்த தமிழ் திரையுலகினர் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு தனது பாராட்டுக்களை அடுத்தடுத்து தெரிவித்து வருகிறார்கள். முன்னதாக இயக்குநர் பாலா , ராம் , மிஸ்கின் , வெற்றிமாறன் , மணிரத்னம் , விக்னேஷ் சிவன் உள்ளிட்டவர்கள் பாராட்டியிருந்தார்கள். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரனா இயக்குநர் ஷங்கர் வாழை படத்தைப் பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
”இனி எனக்கு வாழைப்பழங்களை பார்க்கும்போதெல்லாம் தலையில் வாழைத்தார்களை சுமந்து செல்லும் இந்த கதையின் மாந்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். வாழைப்பழம் இனி முன்னைப் போல் தித்திக்குமா என்றும் தெரியவில்லை. ஒரு யதார்த்த சினிமா, அதனுள் அழகியல், உணர்வுகள் என எல்லாமே சிறப்பாக உள்ளது. மாரி செல்வராஜுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்..!” என ஷங்கர் தெரிவித்துள்ளார்.