Adipurush: 'ஆதிபுருஷ் படம் பார்க்க போறீங்களா?’ .. நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்க வேண்டிய தகவல்கள் இதுதான்..!
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படம் நாளை (ஜூன் 16) வெளியாகவுள்ள நிலையில், அந்த படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை காணலாம்.
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படம் நாளை (ஜூன் 16) வெளியாகவுள்ள நிலையில், அந்த படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை காணலாம்.
இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனான சன்னி சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த ஜூன் 11 ஆம் தேதி தொடங்கியது. ஆதிபுருஷ் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
கடந்தாண்டு வெளியான ஆதிபுருஷ் படத்தின் டீசரும், கடந்த வாரம் வெளியான ட்ரெய்லரும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. இதனிடையே அதிபுருஷ் படத்தின் டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் மிகவும் மந்தமான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆதிபுருஷ் படம் பார்ப்பதற்கு முன் அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
- 1992 ஆம் ஆண்டு ஜப்பானிய மொழியில் வெளியான ராமாயணம்: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா படத்தைக் கண்டு ஆதிபுருஷ் இயக்குநர் ஓம் ராவத் ஈர்க்கப்பட்டுள்ளார். இந்த கதையை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் எடுத்து முடித்துள்ளார்.
- ஆரம்பத்தில் இருந்தே அதாவது 2020ம் ஆண்டில் இருந்தே ஆதிபுருஷ் படத்தின் பட்ஜெட் பற்றி பேசப்பட்டு வருகிறது. முதலில் படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி என்று கூறப்பட்டது. ஆனால் டீசர் ட்ரோல் செய்யப்பட்டதால் தயாரிப்பாளர்கள் விஷுவல் எஃபெக்ட்களை மறுஆக்கம் செய்தனர். இதனால் மேலும் ரூ.100 கோடி செலவானது.
- இந்த படத்தில் சீதை கேரக்டருக்கு நடிகை க்ரிதி சனோன் முதல் தேர்வாக இருக்கவில்லை. மாறாக அனுஷ்கா ஷெட்டி, அனுஷ்கா ஷர்மா, கியாரா அத்வானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
- மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
- 2021 ஆம் ஆண்டில், முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் மும்பையில் போடப்பட்டிருந்த செட்டில் தீ விபத்து ஏற்பட்டது . அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் படத்தின் படப்பிடிப்பை தொடர டூப்ளிகேட் செட் போட வேண்டிய கட்டாயம் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டது.
- ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வுக்காக ரூ.2 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. டிரெய்லர் வெளியீட்டிற்காக திருப்பதிக்கு ஆந்திரா, தெலுங்கானா, சென்னை, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்றனர்.
- ரிலீசுக்கு முன்பே ஜூன் 13 அன்று டிரிபேகா திரைப்பட விழாவில் ஆதிபுருஷ் படம் திரையிடப்படும் என தகவல் வெளியானது. ஆனால் பல காரணங்களுக்காக பிரீமியர் திரையிடல் ரத்து செய்யப்பட்டது.
- ஆதிபுருஷுக்காக பிரபாஸ் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- ஆதிபுருஷ் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தி ஃபிளாஸ் படத்துக்கு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டதால் ஐமேக்ஸ் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
- ஆதிபுருஷ் படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட நிலையில், பிற மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்தி பதிப்பில் பிரபாஸ் தனது பாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக சரத் கேல்கர் டப்பிங் பேசியுள்ளார். இவர் பாகுபலியில் பிரபாஸூக்கு டப்பிங் பேசியவர் ஆவார்.