மேலும் அறிய

"யாரிடமும் அனுமதிவாங்க தேவையில்லை.." துருவ் விக்ரமுடன் காதல் முறிவா? அனுபமா பதிவால் பரபரப்பு

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் துருவ் விக்ரம் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இருவருக்கும் பிரேக் அப் ஆகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன

நடிகர் துருவ் விக்ரம் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதல் உறவில் இருந்ததாக அண்மை காலங்களில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. இருவரும் இணைந்து நடித்த 'பைசன்'  திரைப்படத்தின் படப்பிடிப்பு காலத்தில் நெருக்கமாக பழகியதாகவும், பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக தோன்றியதாலும் காதல் வதந்திகள் வேகமெடுத்தன. இருவரும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், தற்போது அவர்கள் பிரிந்துவிட்டதாக புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் அனுபமாவின் இன்ஸ்டாகிராம் பதிவு 

இந்த பரபரப்புக்கு காரணம் அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு. பல புகைப்படங்களை பகிர்ந்த அவர், "இனி யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. பாடலை யாராவது தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. வேறு யாருடைய கேப்ஷனும் தேவையில்லை. இப்போது பதிவிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்ற பொருளில் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை சுட்டிக்காட்டுவதாக ரசிகர்கள் கருதி, சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கத் தொடங்கினர்.

துருவ் விக்ரமை அன்ஃபாலோ

அதுமட்டுமல்லாமல், அனுபமா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் துருவ் விக்ரமை 'அன்ஃபாலோ' செய்திருப்பதாகவும், அதுவே பிரேக்-அப் வதந்திக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சில ரசிகர்கள் அனுபமாவின் சகோதரரும் துருவை பின்தொடர்வதை நிறுத்தியிருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், இவை அனைத்தும் ரசிகர்களின் கவனிப்புகள் மட்டுமே.

துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் காதலித்து வருவதாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் பல செய்திகள் வெளியாகின. விருது வழங்கும் விழாக்களில் இருவரும் ஒன்றாக தோன்றியது, துருவ் பகிர்ந்த செல்ஃபியை அனுபமா இதய எமோஜியுடன் மறுபகிர்வு செய்தது உள்ளிட்ட சம்பவங்கள் காதல் வதந்தியை மேலும் வலுப்படுத்தின. ஆனால் அந்த நேரத்திலும் இருவரும் தங்களது உறவு குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தற்போது வெளியாகியுள்ள பிரேக்-அப் தகவலும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத ஒன்றாகவே உள்ளது. அனுபமாவின் பதிவு மற்றும் சமூக வலைதள நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தகவல்கள் பரவி வருகின்றன. துருவ் விக்ரம் அல்லது அனுபமா பரமேஸ்வரன் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் மட்டும் இந்த விவகாரத்தை தீவிரமாக விவாதித்து வருகின்றனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Embed widget