Dharshana song : 'ஜிமிக்கி கம்மல்' பாடலை பின்னுக்கு தள்ளிய 'தர்ஷனா'... 111 மில்லியன் வ்யூஸ் பெற்று யூடியூப்பில் சாதனை
யூடியூப்பில் 'எண்டம்மேடே ஜிமிக்கி கம்மல்' பாடலை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது ஹ்ருதயம் படத்தில் இடம்பெற்றுள்ள 'தர்ஷனா' பாடல்.
யூடியூப் தளத்தில் இதுவரையில் முதலிடத்தை பிடித்திருந்த 'ஜிமிக்கி கம்மல்' பாடலை தற்போது தர்ஷனா பாடல் முறியடித்துள்ளது.
2017-ஆம் ஆண்டு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியான 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' இடம் பெற்ற 'எந்தம்மேடே ஜிமிக்கி கம்மல்' பாடல் யூடியூப்பில் அதிகமாக கேட்கப்பட்ட மலையாள பாடல் என்ற வரிசையில் 110 மில்லியன் வியூஸ் பெற்று முதலிடத்தில் இருந்து வந்தது. ஷான் ரஹ்மான் இசையமைப்பில் வினீத் ஸ்ரீனிவாசன், ரஞ்சித் உன்னி பாடிய குரலில் வெளியான ஜிமிக்கி கம்மல் பாடல் அதிகமான வியூஸ் பெற்ற மலையாள பாடலாக சாதனை படைத்தது.
முதலிடத்தில் தர்ஷனா பாடல்:
இந்த நிலையில் இப்பாடலின் வெற்றியை முறியடித்துள்ளது மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமான 'ஹ்ருதயம்' படத்தில் இடம்பெற்ற 'தர்ஷனா' பாடல். வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் ஹீரோவாக நடித்த இப்படம் ஏராளமான சிறப்பம்சங்கள் கொண்ட படமாக ரசிகர்கள் மத்தியில் வெளியாவதற்கு முன்னர் இருந்தே பேராதரவை பெற்று வந்தது. படத்தின் ஒவ்வொரு அப்டேட் வெளியாகும் போதும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. பிரணவ் மோகன்லாலுக்கு திரை பயணத்தில் இது ஒரு சிறந்த படமாக அமையும் என கூறப்பட்டது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலாக 'தர்ஷனா' பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் கலக்கியது.
அறிமுக இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப் இசையில் 'தர்ஷனா' பாடல் 111 மில்லியன் வியூஸ் பெற்று 'ஜிமிக்கி கம்மல்' பாடலை விடவும் 1 கோடி வ்யூஸ் அதிகமாக பெற்று அதிகம் கேட்கப்படும் மலையாள பாடல்களின் பிளேலிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஹ்ருதயம் படத்தில் பிரணவ் ஜோடியாக தர்ஷனா ராஜேந்திரன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் தர்ஷனா. இப்பாடல் ஹீரோவும் ஹீரோயினும் பேசி கொள்வது போல அமைந்து இருக்கும். இந்த பாடலை ஹேசம் அப்துல் வாகப் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் பாடியுள்ளனர்.