Tere Ishk Mein Trailer : விமானப் படை வீரனாக தனுஷ்.. ரசிகர்களை கவர்ந்த 'தேரே இஷ்க் மே' படத்தின் டிரைலர்
Tere Ishk Mein Trailer : தனுஷ் க்ரித்தி சனோன் இணைந்து இந்தியில் நடித்துள்ள தேரே இஷ்க் மே படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் 'தேரே இஷ்க் மே' . க்ரித்தி சனோன் இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேரே இஷ்க் மே படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது
தேரே இஷ்க் மே டிரைலர்
2013ஆம் ஆண்டு ஆனந்த் எல். ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ், தனது முதல் முயற்சியிலேயே 100 கோடி வசூல் சாதனை படைத்தார். பின்னர் பால்கி இயக்கிய ‘ஷமிதாப்’, அதே ஆனந்த் எல். ராய் இயக்கிய ‘அத்ரங்கி ரே’ ஆகிய படங்களில் நடித்தார்.
இப்போது, மூன்றாவது முறையாக ஆனந்த் எல். ராய் – தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘தேரே இஷ்க் மே’. கிரித்தி சனோன் நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். முழுக்க காதல் கதையாக உருவான இந்த படம் வரும் நவம்பர் 28 அன்று திரையரங்குகளுக்கு வருகிறது. இப்படியான நிலையில் தேரே இஷ்க் மே படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது
DHANUSH - KRITI SANON: 'TERE ISHK MEIN' TRAILER ARRIVES – 28 NOV 2025 RELEASE... Absolutely FANTASTIC... #TereIshkMeinTrailer packs a solid punch 🔥🔥🔥.
— taran adarsh (@taran_adarsh) November 14, 2025
Starring #Dhanush and #KritiSanon, #TereIshkMein releases in #Hindi, #Tamil, and #Telugu on 28 Nov 2025.
Trailer 🔗:… pic.twitter.com/pdgSilo8U3





















