மேலும் அறிய

அந்த நடிகை தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்ற தனுஷ்..யார் தெரியுமா ?

D55 படத்தில் நாயகி குறித்து தனுஷ் மற்றும் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

நடிகர் தனுஷ் அடுத்ததாக 'லப்பர் பந்து' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக D56 என அழைக்கப்படும் இந்தப் படத்தின் முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாயகி தேர்வு தொடர்பான தகவல் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திரையுலக வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, இந்தப் படத்திற்கு 'லப்பர் பந்து' திரைப்படத்தில் நடித்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியை நாயகியாக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், நடிகர் தனுஷ் இந்தக் கதாபாத்திரத்திற்கு மமிதா பைஜூ மிகவும் பொருத்தமாக இருப்பார் என விருப்பம் தெரிவித்ததாகவும், இறுதியில் அவரையே ஒப்பந்தம் செய்யும்படி வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமான 'லப்பர் பந்து' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹரிஷ் கல்யாண், தினேஷ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த வெற்றிக்குப் பிறகு தமிழரசன் பச்சமுத்து இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமானது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. D56 படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழு மற்றும் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஓம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். பான் இந்திய அளவில் உருவாகும் இந்தப் படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருவதாகவும், 2026 அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்த 'காரா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அதில் மமிதா பைஜூவின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. 

'பிரேமலு' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மமிதா பைஜூவின் மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விஜய்யின் 'ஜன நாயகன்', சூர்யாவின் 'விஷ்வநாத் & சன்ஸ்', பிரதேப் ரங்கநாதனுடன் புதிய படம், தற்போது தனுஷுடன் D56 என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்புகளை பெற்று வருவதால், தமிழ் சினிமாவின் பிஸியான இளம் நடிகைகளில் ஒருவராக மமிதா பைஜூ உருவெடுத்துள்ளார். 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?
IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?
Hyundai Upcoming Car: கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
Fasting Facts: 36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
Embed widget