மேலும் அறிய
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
ஒரு நாள் காவல் விசாரணையில் நிஷாந்த் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டபோது பயன்படுத்தப்பட்ட பைக், ஸ்பிரேயர் , முகமுடி மற்றும் நகைகளை புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கடப்பாரை கம்பி ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர்.

நிஷாந்த்.
Source : whatsapp
தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு ஒரு நாள் காவல் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட நிஷாந்துக்கு டிசம்பர் 4 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தவிட்ட நீதிபதி - காவல்துறை வாகனத்தில் சிரித்தபடி சிறைக்கு சென்ற நிஷாந்த்.
தனிஷ்க் நகை கடையில் நகைகள் கொள்ளை - நிஷாந்த் கைது
மதுரை தனிஷ்க் நகை கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையில் ஈடுபட்ட மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெரு பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் கைது செய்யப்பட்ட நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பாக நிஷாந்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு வந்தபோது நிஷாந்தை ஓரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதி அளித்த நிலையில் நேற்று மாலை முதல் நிஷாந்திடம் எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
நிஷாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பின்னர் நிஷாந்த் தப்பிப்பதற்கு சேலத்திற்கு சென்ற நிலையில் அங்கு நிஷாந்தை அழைத்துசென்று விசாரணை நடத்தினர்.அங்கு நிஷாந்த் பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் கொள்ளை சம்பவம் நடந்த தனிஷ்க் நகைகடை, நிஷாந்த் வீடு, நகை பதுக்கிய மாடக்குளம் வயல்வெளி ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது நிஷாந்த் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஸ்பிரேயர், முகமூடி மற்றும் நகையை புதைத்து வைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கடப்பாரை கம்பி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்பின்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு நிஷாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
நிஷாந்த் சிரித்தபடி காவல்துறை வாகனத்தில் ஏறி சிறைக்குச் சென்றார்.
இதையடுத்து மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு முன்பாக ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி நிஷாந்திடம் விசாரணையின்போது துன்புறுத்தினார்களா? வேறு எது சொல்ல வேண்டுமா? என கேட்டபோது எதுவும் இல்லை என நிஷாந்த் பதிலளித்தார். இதனையடுத்து விசாரணை வரும் டிசம்பர் -4ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ராஜபிரபு உத்தரவிட்ட நிலையில் மதுரை மத்திய சிறைக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட நிஷாந்த் சிரித்தபடி காவல்துறை வாகனத்தில் ஏறி சிறைக்குச் சென்றார்.
இது குறித்து பேசிய நிசாந்தின் வழக்கறிஞர் நிஷாந்த் பெரியரசு :
ஒரு நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் நிஷாந்திடம் பல்வேறு விசாரணை நடத்தினார்கள் நிஷாந்திற்கு எந்த காயமும் இல்லை வழக்கறிஞராகிய என்னை சந்திக்க அனுமதித்தனர் என தெரிவித்தார்.
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















