மேலும் அறிய

ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!

ட்ரம்புக்கு எதிராக போர்ச்செலவு விவகாரத்தை பூதாகரமாக்கும் எதிர்க்கட்சி! - அதிபர் தேர்தலுக்காக வகுக்கப்படும் புது வியூகம் என்ன?

ஈரானுடனான போருக்கு அமெரிக்க தரப்பில் மொத்தமாக 48 பில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டதாக பென்டகனின் வரவுசெலவு திட்ட அதிகாரி தெரிவித்துள்ள தகவல் அமெரிக்காவில் விவாதப்பொருளாகி உள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்

இஸ்ரேலை எதிர்த்து வந்த ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் ஈரான் ஆதரவு அளித்து வந்ததன் காரணமாகவும், அணுசக்தி கட்டமைப்புக்காகவும் அமெரிக்க - இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து இரு நாடுகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது.இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய முக்கிய நுழைவு வாயிலாக இருந்த ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. மேலும் தனது நட்பு நாடுகளுக்கு மட்டுமே ஹோர்மூஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதியளித்ததன் காரணமாக அந்நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

ஈரான் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு இடையூறு அளித்ததோடு, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் குவைத், சவூதி அரேபியா,அக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளையும் தாக்கியது. 

ஈரான் போரால் ஏற்பட்ட இழப்பு

இந்நிலையில் அமெரிக்க ராணுவத்தலைமையகமான பெண்டகனின் நிதி அதிகாரியாக உள்ள ஆர்தர் மில்லர், அந்நாட்டு கடற்படையின் நிதிக்கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்படுவதற்கான அமெரிக்க செனட் ஆயுதப்படைகள் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று அறிக்கைகளை சமர்ப்பித்த ஆர்தர் மில்லர் ஈரான் போருக்கான அமெரிக்க செலவு 48 பில்லியனுக்கும் அதிகம் என்ற விவரத்தை வெளியிட்டார். இவ்விவகாரம் அமெரிக்க அரசியலில் விவாதப்பொருளாக மாறி ட்ரம்புக்கு தலைவலி அளிக்கத்தொடங்கி உள்ளது.

மேலும் 48 பில்லியன் டாலர் என்பது அமெரிக்கா செலவிட்ட தொகை மட்டும்தான் எனவும், ஈரானால் தாக்கப்பட்டு சேதமடைந்த இழப்பீடுகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஈரான் போரால் இடைக்காலத் தேர்தலில் பின்னடைவை சந்தித்த ட்ரம்ப் 

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற இடைக்காலத்தேர்தலில் பிரதிநிதிகள் மற்றும் செனட் சபைகளில் ட்ரம்பின் குடியரசு கட்சி பின்னடைவை சந்தித்து ஜனநாயகக்கட்சி வெற்றி பெற்றது. குடியரசு கட்சியின் இந்த தோல்விக்கு ஈரான் மீதான் போரும் முக்கிய காரணமென குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இத்தேர்தல் முடிவுகளின் இதன் தாக்கம் 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபருக்கான தேர்தலில் எதிரொலிக்கும் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் ஈரான் போரால் ஏற்பட்ட இழப்பீடு குறித்த விவரங்களும் கசிந்துள்ள நிலையில், இதை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்கி பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Embed widget