Dhanush Gray Man: எங்கள் நண்பர் தனுஷைப் பார்க்க இந்தியா வருகிறோம்.... ரூசோ பிரதர்ஸ் அதிரடி அறிவிப்பு!
Dhanush Gray Man:’த க்ரே மேன்’ படத்தில் நடிகர் தனுஷ் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் குறித்த கேள்வி - பதில் செஷன் அடங்கிய நெட்ஃப்ளிக்ஸ் ப்ரொமோ ஒன்று வெளியாகி உள்ளது.
ஹாலிவுட்டில் 'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட பிரபல ஆக்சன் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் ’த க்ரே மேன்’ (The Gray Man) படம் வரும் ஜூலை 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், இப்படத்தின் மீதான இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
கலிஃபோர்னியாவில் தனுஷ்
இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் கலந்துகொள்ள தனுஷ் கலிஃபோர்னியா சென்றுள்ள நிலையில், தனுஷ் ஹாலிவுட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கலகலப்பாக பதிலளிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளன.
View this post on Instagram
இந்நிலையில் ’த க்ரே மேன்’ படத்தின் கேள்வி - பதில் உரையாடல் போன்ற ப்ரொமோஷன் வீடியோ ஒன்றை முன்னதாக நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இதனை தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
’விரைவில் இந்தியா வருகிறோம்...’
இந்த வீடியோவில் இப்படத்தின் இயக்குநர்களான ரூசோ பிரதர்ஸ் தாங்கள் விரைவில் தங்கள் நண்பர் தனுஷைப் பார்க்க இந்தியா வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக படத்தின் ட்ரெய்லரில் தனுஷின் காட்சிகள் வெகு சில நொடிகளே இடம்பெற்றிருந்த நிலையில், இந்திய ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் தற்போது நெட்ஃப்ளிக்ஸால் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ இந்திய ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
View this post on Instagram
மேலும் இதற்கு முன்னர் வெளியான தனுஷின் 50 நொடிகள் காட்சி வீடியோவும் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.