Captain Miller: கேப்டன் மில்லர் மொத்தம் 3 பார்ட்.. அடுத்த படமும் தனுஷ்கூடதான்.. இயக்குநர் தந்த அப்டேட்!
தனுஷ் நடித்து உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படம் மொட்தம் மூன்று பாகங்கள் கொண்ட படம் என்று இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்
கேப்டன் மில்லர்
ராக்கி. சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தற்போது தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தை இயக்கி வருகிறார். தனுஷ், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஷிவ ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் நடித்து, ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கேப்டன் மில்லர் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் கதை
சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தின் டீசர் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது. பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் இப்படம், முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளால் நிறைந்திருக்கும் என்பது உறுதி. 1930 முதல் 40 காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்றும், தனிமனிதனின் சுதந்திரத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன் எப்படி போராளியாக மாறுகிறார் என்பதே இந்தப் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் என்று அவர் தெரிவித்தார். தன்னுடைய முதல் படமான ராக்கி படம் வெளியாவதற்கு முன்பாகவே கேப்டன் மில்லர் படத்தின் கதையை தான் தனுஷிடம் சொன்னதாகவும், அப்போதே அவர் இந்தப் படத்தில் நடிகக சம்மதித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் கதையை தான் எழுதும்போதே தனுஷை மனதில் வைத்து எழுதியதாக அவர் தெரிவித்துள்ளார்.
3 பாகங்கள்
கேப்டன் மில்லர் படத்திற்கு தன்னிடம் மொத்தம் மூன்று பாகங்களுக்கான கதை இருப்பதாகவும் இப்போது தான் இயக்கியிருக்கும் படம் இரண்டாவது பாகமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு முன்கதையாக ஒரு படமும் பின் கதையாக ஒரு படமும் எடுப்பதற்கான திட்டம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தப் படங்களுக்கு மிகப்பெரிய பட்ஜட் தேவைப்படுவதால் இப்போதைக்கு அது சாத்தியம் இல்லை என்றும் அவர் கூறினார். கேப்டன் மில்லர் படம் ரசிகர்களிடம் எந்த மாதிரியான வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் பொறுத்தே அதை முடிவு செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
அடுத்தப் படமும் தனுஷுடன்
கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்தையும் தனுஷூடன் இயக்க இருப்பதாக அருண் மாதேஸ்வரன் கூறியிருக்கிறார். இந்தப் படத்திற்கு கேப்டன் மில்லர் படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்பதையும் அவர் தெளிவாக கூறியுள்ளார். தனுஷ் தவிர்த்து நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் கதை சொல்லியிருப்பதாகவும், தன்னுடைய படங்களை ரசிக்க பார்க்கக்கூடிய ஒருவர் விஜய் தேவரகொண்டா எனவும் அருண் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க : 10 Years Of Chennai Express : பாலிவுட் ஹீரோ.. கோலிவுட் ஹீரோயின்...10 ஆண்டுகளைக் கடந்துள்ள சென்னை எக்ஸ்பிரஸ் படம்
Director Ramana : விஜய்யுடன் முதல் படம்.. அடுத்தடுத்த தோல்விகள்.. திருமலை இயக்குநர் என்ன செய்றார்?