3 Movie Release: ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு ஆட்டம் போட்ட ரசிகர்கள்! ரீ ரிலீசான தனுஷின் 3!
தனுஷ் நடித்து வெளியான 3 படம் திரையரங்கத்தில் ரி ரிலீஸ் ஆனதைத் தொடர்ந்து ரசிகர்கள் அந்தப் படத்தை கொண்டாடி மகிழ்கின்றனர்
3
தனுஷ் நடித்து கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் 3. ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக அனிருத் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஸ்ருதிஹாசன் , சிவகார்த்திகேயன், பிரபு, பானு பிரியா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
இளைஞர்களைக் கவர்ந்த 3
3 திரைப்படம் மிக சுமாரான வெற்றியை பதிவு செய்தது என்றாலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் படம் வெளியாவதற்கு முன்பாக மிகப்பெரிய ஹிட் ஆகின, அதிலும் குறிப்பாக ஒய் திஸ் கொலவெறி பாடல் கண்டம் கடந்து ஹிட் அடித்து யூடியூபில் சாதனைப் படைத்தது.
ரீ ரிலீஸ்
சென்னையில் உள்ள கமலா திரையரங்கு தொடர்ச்சியாக பல படங்களை ரீரிலிஸ் செய்து வருகிறது. சமீபத்தில் கமல்ஹாசன் நடித்த விருமாண்டி படத்தைத் தொடர்ந்து தற்போது 3 படத்தை ரீரிலிஸ் செய்தது கமலா திரையரங்கம். இப்படி ரீ ரிலிஸாகும் படங்களுக்கு புதிய படங்களுக்கு நிகரான வரவேற்பு கிடைக்கிறது. தங்களது கடந்த காலத்தில் பார்த்த அல்லது திரையரங்கத்தில் பார்க்க முடியாமல் போன படங்களை பார்த்து கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.
View this post on Instagram
திரையரங்கத்தில் வெளியான 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு ரசிகர்கள் அனைவரும் திரை முன் நின்ற பாட்டு பாடி ஆடிய வீடியோ இணையதளத்தில் வைராகி வருகிறது. இந்த வீடியோவை கமலா திரையரங்கம் சார்பாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
கேப்டன் மில்லர்
KILLER KILLER #CaptainMiller will storm your playlists from Tomorrow 5PM 😎🥁🔊
— Sathya Jyothi Films (@SathyaJyothi) November 21, 2023
A @gvprakash musical
Vocals @dhanushkraja
Lyrics @kabervasuki@ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @priyankaamohan @saregamasouth @LycaProductions @KRG_Studios pic.twitter.com/hjZXKppT0c
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் , பிரியங்கா மோகன் , ஷிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் நடித்து ஜி வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலன்று வெளியாக இருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் முதல் பாடலான கில்லர் கில்லர் பாடல் நாளை மாலை 5 மணியளவில் வெளியாக இருக்கிறது. இந்தப் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.