Dhadak 2 : கரண் ஜோஹர் கையில் சிக்கிய பரியேறும் பெருமாள் ரீமேக்...தடக் 2 படத்தின் போஸ்டர் இதோ
மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக் தடக் 2 படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது
பரியேறும் பெருமாள்
மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகிய படம் பரியேறு பெருமாள். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் கதிர் , கயன் ஆனந்தி , யோகி பாபு , மாரிமுத்து உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். நீலம் ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்தார். தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழும் சாதிய வன்முறைகளை அடையாளப் படுத்து ஒரு காதல் கதையை இப்படத்தில் சித்தரித்தார் மாரி செல்வராஜ் .
எல்லா தரப்பு ரசிகர்களிடமும் பரவலான வரவேற்பைப் பெற்ற இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப் பட்டுள்ளது.
தடக் 2 (Dhadak 2)
कैसे मिलेंगे - आग और पानी?
— Dharma Productions (@DharmaMovies) May 27, 2024
Presenting Dhadak 2 starring Siddhant Chaturvedi & Triptii Dimri. Directed by Shazia Iqbal.#Dhadak2 in cinemas 22nd November 2024.#KaranJohar #UmeshKrBansal @apoorvamehta18 @MeenuAroraa @somenmishra0 @SiddyChats @tripti_dimri23 #ShaziaIqbal… pic.twitter.com/FbXAnGsHu7
கரண் ஜோகரின் தர்மா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் தடக். மராத்தியில் நாகராஜ் மஞ்சுலே இயக்கத்தில் சாதிய வன்முறைப் பற்றி மிகவும் காத்திரமான படைப்பாக வெளியான சைராத் படத்தின் ரீமேக் ஆக உருவானதே தடக். ஆனால் மராத்தியில் பேசப் பட்ட சாதியப் புரிதல் சுத்தமாக இல்லாமல் பக்கா பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் இந்தப் படம் அரசியல் நீக்கம் செய்து ஒரு சாதாரண காதல் கதையாக எடுக்கப்பட்டிருந்தது தடக்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக தடக் 2 படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தின் ரீமேக்தான் தடக் 2. சித்தாந்த் சதுர்வேதி மற்றும் த்ரிப்தி திம்ரி ஆகிய இருவர் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
ஷாஜியா இக்பால் இப்படத்தை இயக்கியுள்ளார். வரும் நவம்பர் 22-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் கடந்த முறை போலவே இப்படத்தின் அரசியல் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு ஒரு வழக்கமான பாலிவுட் காதல் கதையைத்தான் இந்த முறையும் எடுக்கப்போகிறார்கள் என்று நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.
இந்த போஸ்டரில் கற்பி , கிளர்ச்சி செய் , ஒன்றுசேர் , தலித் லைவ்ஸ் மேட்டர் என்கிற வாசகங்கள் காணப்பட்டாலும் படத்தில் எந்த அளவிற்கு பரியேறும் பெருமாள் படத்தில் பேசிய அரசியலை பேசுவார்கள் என்பது படம் வெளியான பின் தான் தெரிந்துகொள்ள முடியும் .