அனன்யா பாண்டேவுக்கு டேட்டிங்க் டிப்ஸ் கொடுத்தீர்களா? - தீபிகா படுகோனேவின் அசத்தல் பதில்
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், தீபிகா படுகோனே படப்பிடிப்பின் போது, தன்னுடன் நடித்த அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி ஆகியோருக்கு டேட்டிங் டிப்ஸ் வழங்கியது குறித்து தெரிவித்துள்ளார்.
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவிருக்கும் `கெஹ்ரய்யான்’ திரைப்படத்தை எதிர்பார்த்து பலரும் காத்திருப்பதாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். படத்தில் நடித்திருக்கும் நட்சத்திர நடிகர்கள், பாடல்கள், தீபிகா படுகோனேவுக்கும் சித்தாந்த் சதுர்வேதிக்கும் இடையிலான காதல் காட்சிகள் முதலான பல காரணங்களால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. படத்தின் வெளியீடு மிக அருகில் இருப்பதால் இதில் நடித்த முன்னணி நடிகர்கள் படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், தீபிகா படுகோனே படப்பிடிப்பின் போது, தன்னுடன் நடித்த அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி ஆகியோருக்கு டேட்டிங் டிப்ஸ் வழங்கியது குறித்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் `கெஹ்ரய்யான்’ திரைப்படத்தில் நடித்த அனன்யா பாண்டே, நடிகர் இஷான் கட்டெருடனும், சித்தாந்த் சதுர்வேதி அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தாவுடனும் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இருவரும் இந்த விவகாரத்தை பகிரங்கமாக அறிவிக்கவில்லை என்ற போது, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை முறையின் காரணமாக அடிக்கடி செய்திகளில் இடம்பெறுவது இந்தப் பிரபலங்களின் வழக்கம். இவர்களுள் தீபிகா படுகோனே திருமணமானவர் என்பதால் தன்னுடன் நடித்த நடிகர்களுக்கு டேட்டிங் டிப்ஸ் வழங்கினாரா எனக் கேட்கப்பட்டது. அப்போது தீபிகா படுகோனே மறுத்துள்ளார்.
அனன்யா பாண்டேவுக்கு, சித்தாந்த் சதுர்வேதிக்கும் டேட்டிங் டிப்ஸ் வழங்க முடியுமா என்ற கேட்ட போது, தன்னால் முடியாது எனவும், அது தன்னுடைய குணம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். `இல்லை.. நான் அவர்களுக்குப் பாடம் நடித்திக் கொண்டிருப்பதாக என்னைக் கற்பனையிலும் எண்ண முடியாது. அது என்னுடைய ஐடியாவும் அல்ல. மேலும் அது என்னுடைய ஸ்டைல் அல்ல.. இந்தப் படத்தை இப்படியாக அணுகுவது தவறு’ எனவும் தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
மற்றொரு நேர்காணலில் நடிகை தீபிகா படுகோனேவின் கணவர் ரன்வீர் சிங் `கெஹ்ரய்யான்’ திரைப்படத்தைப் பார்த்த பிறகு, அது தீபிகா நடித்த மிகச் சிறந்த கதாபாத்திரங்களுள் ஒன்று எனக் கூறியதாக தெரிவித்துள்ளார். தீபிகா படுகோனேவின் பிறந்த நாளின் போது, `கெஹ்ரய்யான்’ படத்தை முன்வைத்து அவருக்கு இன்ஸ்டாகிராம் தளத்தில் ரன்வீர் சிங் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram