Deepika Padukone: மன அழுத்தம் குறித்த பேச்சு! - டைம்ஸ் டாப் 100 பட்டியலில் இடம் பிடித்த தீபிகா படுகோன்!
அண்மையில் இலவச கவுன்சிலிங்குக்கான இலவச தொடர்பு எண் ஒன்றையும் அவர் பகிர்ந்திருந்தார்
பாலிவுட் நடிகர் தீபிகா படுகோன் இந்தித் திரைப்பட உலகின் தவிர்க்கமுடியாத ஸ்டாராக வலம் வருபவர். ஷாருக்கான் உடனான ஓம் சாந்தி ஓம் திரைப்படம் அவரை ஒரு நடிகராகப் பதிவு செய்தது என்றாலும் காக்டெயில் திரைப்படம் அவரது சிறந்த நடிப்புக்கான உதாரணமாக ஆனது. அண்மையில் தாக்கத்தை ஏற்படுத்திய 100 நபர்கள் பட்டியலில் நடிகர் தீபிகா படுகோனையும் பட்டியலிட்டுள்ளது ’டைம்ஸ்’ பத்திரிகை.
மனநலன் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியதற்காக அவர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டது குறித்து வெளிப்படையாகப் பேசியதோடு மட்டுமல்லாமல் அதிலிருந்து மீள தொடர் சிகிச்சையும் எடுத்துக் கொண்டார்.
இந்தநிலையில்தான் அவர் தற்போது தாக்கத்தை ஏற்படுத்தும் 100 நபர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதுகுறீத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள தீபிகா, ‘திங்கள் காலை நல்லபடியாக விடிந்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
தீபிகா நடித்து அண்மையில் வெளிவந்த கெஹ்ரியான் திரைப்படம் பெறும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இலவச கவுன்சிலிங்குக்கான இலவச தொடர்பு எண் ஒன்றையும் அவர் பகிர்ந்திருந்தார்
View this post on Instagram