Deepika Padukone: திருப்பதி வந்தா திருப்பம்...! நடந்தே மலையேறி ஏழுமலையானை தரிசிக்க சென்ற தீபிகா படுகோன்! வீடியோ
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடந்தே மலையேறி திருமலை சென்றுள்ளார்.
திருமலை திருப்பதி:
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி தரிசனம் என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மலையேறிய தீபிகா படுகோன்:
கடந்த 2007-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ படம் மூலம் அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன். கிட்டதட்ட 13 ஆண்டுகள் சினிமா துறையில் இருக்கும் தீபிகா படுகோன் பல்வேறு கதாபாத்திரங்களின் வழியே நடிப்பின் மூலம் தன்னை திரைத்துறையில் நிலைநிறுத்திக்கொண்டுள்ளார்.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தது. இந்த இரண்டு படங்களும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்தது. தற்போது தீபிகா கைவசம் மூன்று படங்கள் உள்ளன. இதனிடையே ஹிருத்திக் ரோசனுடன் இவர் இணைந்து நடித்த Fighter திரைப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
Actor @deepikapadukone arrived at Tirumala to offer prayers to Lord Venkateswara, along with her sister and professional golfer Anisha Padukone..#viral #deepikapadukone #AndhraPradesh #Tirumala #anishapadukone pic.twitter.com/cz0geymMS9
— siva (@sivakaika) December 14, 2023
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடந்தே மலையேறி திருமலை சென்றுள்ளார். தீபிகா உடன் அவருடைய தங்கை அனிஷா படுகோனும் மலையேறியுள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமலையில் உள்ள ராதேயம் விருந்தினர் மாளிகையை அடைந்த தீபிகா படுகோன் நேற்று இரவு திருமலையில் தங்கி வெள்ளிக்கிழமை அதாவது இன்று காலை விஐபி இடைவேளையின் போது சுவாமி ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Bommi Serial: 8 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லி நகருக்கு திரும்பும் பொம்மி!
மேலும் படிக்க: Kottukkaali: பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் படம்: ‘கொட்டுக்காளி’யால் செம குஷியில் சிவகார்த்திகேயன்