மேலும் அறிய

Kamal Haasan - Daniel Balaji: தம்பி பாலாஜி ஒளியை கொடையளித்துச் சென்றுள்ளார்: கமல்ஹாசன் இரங்கல்!

Daniel Balaji Death: 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில் அமுதன் எனும் சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசனின் டிசிபி ராகவன் பாத்திரத்துக்கு சவால் விடும் வில்லனாக டேனியல் பாலாஜி அசத்தியிருந்தார்.

தமிழ் சினிமாவில் கலக்கிய முக்கிய வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி (Daniel Balaji) நேற்று இரவு திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். 48 வயதில் திடீரென இவர் உயிரிழந்தது திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வேட்டையாடு விளையாடு அமுதன்

இந்நிலையில் டேனியல் பாலாஜிக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் நேரிலும் இணையத்திலும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் டேனியல் பாலாஜிக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் நாயகனும், தமிழ் சினிமாவின் உச்ச நடிகருமான கமல்ஹாசன் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் இரங்கல்

“தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி” எனப் பதிவிட்டுள்ளார்.

 

‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் அமுதன் எனும் சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசனின் டிசிபி ராகவன் பாத்திரத்துக்கு சவால் விடும் வில்லனாக டேனியல் பாலாஜி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறைந்த நடிகர் முரளியின் தம்பி

நடிகர் முரளியின் உறவினர் மற்றும் தம்பியாக இருந்தாலும், திரைத்துறையில் அவரிடமிருந்து எந்தவொரு உதவியையும் பெறாமல், டேனியல் பாலாஜி தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் பயின்று, பின் தாமாகவே திரைத்துறையில் படிப்படியாக உயர்ந்தார். சித்தி தொலைக்காட்சித் தொடரில் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கி, படிப்படியாக திரைத்துறையில் நுழைந்து கவனிக்க வைத்த டேனியல் பாலாஜி,  கௌதம் மேனன், வெற்றிமாறன் என தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களின் படங்களில் மிளிர்ந்தார்.

தனித்துவமான நடிகர்

சித்தி சீரியல் தொடங்கி, காக்க காக்க, பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, வட சென்னை ஆகிய திரைப்படங்களில் நடித்த இவரது பாத்திரத்துக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

சென்னை, புரசைவாக்கத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் டேனியல் பாலாஜியின் உடலுக்கு திரைப்பிரபலங்களும் உறவினர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டேனியல் பாலாஜியின் அண்ணன் மகன் அதர்வா, நடிகர்கள் விஜய் சேதுபதி, சென்றாயன் உள்ளிட்ட பலர் முன்னதாக அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை ஓட்டேரியில் டேனியல் பாலாஜியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
Embed widget