Watch Video: லதாவை நினைத்து கண்ணீர் விட்ட ஆஷா போஸ்லே.. சோகக்கடலுக்குள் போன ரியாலிட்டி ஷோ!!
நடன நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த லதா மங்கேஷ்கரை நினைத்து ஆஷா போஸ்லே அழுத வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடன நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த லதா மங்கேஷ்கரை நினைத்து ஆஷா போஸ்லே அழுத வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹிந்தியில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸ் இந்தியா டான்ஸ் லிட்டில் மாஸ்டர்ஸ் நிகழ்ச்சியில் பிரபல பாடகரும், லதா மங்கேஷ்கரின் சகோதரியுமான ஆஷா போஸ்லே, நடிகை மெளனி ராய் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மறைந்த பாடகியான லதா மங்கேஷ்வருக்கு ஆஷா போஸ்லே மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து இரு குழந்தைகள் நடனமாடினர். அதில் ஒரு குழந்தை ஆஷா போன்றும், இன்னொரு குழந்தை லதா மங்கேஷ்கர் போன்றும் ஆடை அணிந்திருந்தனர். இதைப்பார்த்த ஆஷா போஸ்லே கண்ணீர் விட்டு அழுதார். கூடவே மெளனி ராயும் உடைந்து அழுதார். தொடர்ந்து பேசிய ஆஷா, “ லதா இந்த உலகை விட்டு சென்றிருக்கலாம். ஆனால், அவர் இன்னும் என்னுடன்தான் இருக்கிறார் என்று பேசினார்” இது தொடர்பான ப்ரோமோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
முன்னதாக கொரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு, மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி உயிரிழந்தார். அவர் உயிர் பிரியும் போது அவருக்கு வயது 92. அவரது உடல் மும்பை சிவாஜி பூங்காவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமல்லாது பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிடோரும் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















