Dada Trailer: பொறுப்பற்ற இளைஞன் டூ பொறுப்பான தந்தை... கவனமீர்க்கும் டாடா பட ட்ரெய்லர்
டாடா படத்தின் இசை மற்றும் ட்ரெயலர் வெளியீட்டு விழா இன்று மாலை விஜயா நெக்சஸ் மாலில் நடைபெற்ற நிலையில், இவ்விழாவில் நடிகர் கவின், அபர்ணா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள டாடா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
கவினின் மூன்றாவது படம்
பிக் பாஸ் சீசன் 4 மூலம் லைம்லைட்டுக்கு வந்து பிரபலமடைந்தவர் கவின். விஜய் டிவியின் ஆஃபிஸ், சரவணன் மீனாட்சி தொடர்கள் மூலம் அடி எடுத்து வைத்து சீரியல் உலக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் நடிகர் கவின். தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் விமர்சனங்கள் தாண்டி தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறிய கவின், நட்புனா என்னனு தெரியுமா, லிஃப்ட் என வெள்ளித்திரையில் அடுத்தடுத்து படங்கள் நடித்தார்.
அந்த வரிசையில் முன்னதாக அறிமுக இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ‘பீஸ்ட்’ பட நடிகை அபர்ணா தாஸூடன் டாடா படத்தில் கமிட் ஆனார் கவின். இப்படத்தில் நடிகர் பாக்யராஜ், ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரீஷ், ‘வாழ்’ பிரதீப், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், முன்னதாக படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிட உள்ளது.
வெளியான ட்ரெய்லர்
இப்படத்தின் டாடா எ சாங் எனும் பாடல் மற்றும் படத்தின் டீசர் வீடியோக்கள் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் டாடா படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
View this post on Instagram
டாடா படத்தின் இசை மற்றும் ட்ரெயலர் வெளியீட்டு விழா இன்று மாலை விஜயா நெக்சஸ் மாலில் நடைபெற்ற நிலையில், இவ்விழாவில் நடிகர் கவின், அபர்ணா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
ஜென் மார்ட்டின் இசையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள ‘போகாதே’ எனும் பாடல் இவற்றில் கவனமீர்த்துள்ளது.
நகைச்சுவை ஜானரில் தந்தை - மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
மேலும் படிக்க: T. P. Gajendran: ”எனது கல்லூரித் தோழர் டி.பி.கஜேந்திரன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது” - முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல்!