மேலும் அறிய

T. P. Gajendran: ”எனது கல்லூரித் தோழர் டி.பி.கஜேந்திரன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது” - முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல்!

இயக்குநர் டி. பி. கஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் காமெடி நடிகருமான டி. பி. கஜேந்திரன் (68) உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.பி. கஜேந்திரன் சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார். 

பல்வேறு திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ள இவர் பழம்பெறும் நடிகை டி.பி. முத்துலட்சுமி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

இயக்குநர் விசுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய டி. பி. கஜேந்திரன், விசுவை போன்றே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழ் திரையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றன. 

இந்தநிலையில், இயக்குநர் டி. பி. கஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர் டி.பி.கஜேந்திரன் அவர்கள் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன்.

தற்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது. திரு. டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

T20 World Cup 2024 BAN vs NED: டி20 உலகக் கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்! சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!

Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து! உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விரைவில் கொண்டு வரப்படும் - முதலமைச்சர் உத்தரவாதம்

Kuwait Fire Death: ரூ.5 லட்சம் நிதியுதவி.. குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

Tamilisai Soundararajan: அமித்ஷா கண்டித்தாரா? - தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
Tamilisai Soundararajan: அமித்ஷா கண்டித்தாரா? - தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!Thirupachi Benjamin | பிரபல ஹோட்டலில் விருந்து..பூரித்துபோன நரிக்குறவ மக்கள்! அசத்திய நடிகர்Modi Odisha Event | ஒலித்த வாழ்த்து பாடல்..அமர்ந்த மோடி!பதறிய அமித்ஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 World Cup 2024 BAN vs NED: டி20 உலகக் கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்! சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
T20 World Cup 2024 BAN vs NED: டி20 உலகக் கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்! சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து! உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விரைவில் கொண்டு வரப்படும் - முதலமைச்சர் உத்தரவாதம்
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து! உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விரைவில் கொண்டு வரப்படும் - முதலமைச்சர் உத்தரவாதம்
Kuwait Fire Death: ரூ.5 லட்சம் நிதியுதவி.. குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Kuwait Fire Death: ரூ.5 லட்சம் நிதியுதவி.. குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Tamilisai Soundararajan: அமித்ஷா கண்டித்தாரா? - தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
Tamilisai Soundararajan: அமித்ஷா கண்டித்தாரா? - தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
Speaker: ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்?: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி !

350 ஆண்டுகள் வரலாறு! காமநாயக்கன்பட்டி கிறித்துவ ஆலயத்தை பாதுகாத்த எட்டையபுரம் பாளையக்காரர்கள்!

PM Modi: பதவியேற்றதும் முதல் பயணம்.. இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

Roshini Haripriyan: ”ஒரே சங்கடமா போச்சு” நடுரோட்டில் அசிங்கப்பட்ட பாரதி கண்ணம்மா ரோஷினி - என்னாச்சு?

Embed widget