DaDa First Look: ’தாதா’: கவின் - அபர்ணாதாஸ் நடிப்பில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் மற்றும் பீஸ்ட் நடிகை அபர்ணா தாஸ் இருவரும் இணைந்து ஒரு ரொமாண்டிக் திரைப்படத்தில் நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.
பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் மற்றும் பீஸ்ட் நடிகை அபர்ணா தாஸ் இருவரும் இணைந்து ஒரு ரொமாண்டிக் திரைப்படத்தில் நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.
இதையடுத்து படத்தில் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று வெளியாகி உள்ளது. இதை அறிமுக இயக்குநர் கணேஷ் பாபு இயக்குகிறார். தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்கள், அதன் தலைப்பையும் அறிவித்துள்ளனர். படத்திற்கு தாதா என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த தலைப்புக்கு காரணம் அதன் பரிச்சயமே என்று கணேஷ் கூறுகிறார். “ஒவ்வொருவரும் இந்த வார்த்தையை குறிப்பிட்டிருப்பார்கள் அல்லது தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தப் பெயரைக் கடந்திருப்பார்கள். தவிர, தலைப்புக்கு நிறைய முக்கியத்துவம் மற்றும் படத்தின் தலைப்புடன் ஸ்க்ரிப்ட் பொருந்திப் போகிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
படம் மார்ச் மாதம் தொடங்கியது. இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்கும். முழுப் படமும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இயக்குநர் கணேஷ் கூறுகையில், இன்றைய தலைமுறைக்கான ஆவணமாக இந்தப் படம் இருக்கும். “இன்றைய இளைஞர்கள் அதிவேகமானவர்கள் மற்றும் உறவுகளுக்கு மிகவும் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளனர். நாங்கள் டேட்டிங் செய்யும் போது, எங்கள் காதலுடன் பேச குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். ஆனால் இந்த தலைமுறையினர் உறவுகளின் விஷயத்தில் மிகவும் தைரியமாக இருக்கிறார்கள். உறவுகள் மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டம் நம்முடையதை விட வித்தியாசமானது. அவர்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் ஒரு திரைப்படத்தை நான் உருவாக்க விரும்பினேன்,” என்று அவர் கூறினார்.
கவின் தான் தனது முதல் மற்றும் ஒரே சாய்ஸ் என்று கூறிய அவர், “அவர் என் கல்லூரியில் ஜூனியர், நாங்கள் சிறிது காலம் நண்பர்களாக இருந்தோம். நான் ஸ்கிரிப்டை முடித்ததும், அவரைத் தாண்டி நான் வேறு யாரையும் இந்தக் கேரக்டருக்கு யோசிக்கவில்லை. எனக்கு எந்த இமேஜும் இல்லாத புதிய நடிகர்கள் தேவை,அதனால் அவர் சரியான தேர்வாக இருந்தார்," என்றார், "கவின் தான் அபர்ணா தாஸை மற்றொரு கதாபாத்திரத்திற்காகப் பரிந்துரைத்தார், அவர் பீஸ்டில் நடிப்பதைப் பார்த்ததாகக் கூறினார். நானும் அவருடைய சில மலையாளப் படங்களைப் பார்த்தேன். நான் அவரிடம் கதையைச் சொன்னதும் அவர் ஓகே சொல்லிவிட்டார்” என்றார்.