Curd Rice : என்னது? தயிர் சாதம் சாப்பிட்டா இது சேதமா? நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா..
செலிப்ரிட்டி என்றால் இன்டர்நேஷனல் க்யூசைன் அதாவது சர்வதேச உணவு வகைகளைத் தான் சாப்பிடுவார்கள் என்று நாம் யோசித்துக் கொண்டால் அது தப்புக் கணக்கு. அதை நிரூபித்துள்ளது ஆலியா பட், ரகுல் ப்ரீத் சிங் போன்ற நட்சத்திரங்களின் ஃபேவரைட் டிஷ். ஆம் இவர்களின் ஃபேவரைட் டிஷ் என்னவோ தயிர் சாதம் தானாம்.
செலிப்ரிட்டி என்றால் இன்டர்நேஷனல் க்யூசைன் அதாவது சர்வதேச உணவு வகைகளைத் தான் சாப்பிடுவார்கள் என்று நாம் யோசித்துக் கொண்டால் அது தப்புக் கணக்கு. அதை நிரூபித்துள்ளது ஆலியா பட், ரகுல் ப்ரீத் சிங் போன்ற நட்சத்திரங்களின் ஃபேவரைட் டிஷ். ஆம் இவர்களின் ஃபேவரைட் டிஷ் என்னவோ தயிர் சாதம் தானாம்.
கோடை காலத்தில் கொளுத்தும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க இயல்பாகவே நாம் சாப்பாட்டில் தயிர், மோர் சேர்த்துக் கொள்வது வழக்கம் தான். தயிர் சாதம் வெப்பத்தை தணிக்க மட்டுமல்ல வயிற்றின் பல்வேறு உபாதைகளுக்கும் சிறந்த தீர்வு தான். இதில் புரதம், ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. நார்ச்சத்தும் அதிகம். இது ஒட்டுமொத்தமாக உடல்நலத்திற்கே நல்லது.
தயிர் சாதத்தின் நன்மைகள் என்ன?
இது ப்ரோபயாடிக் எனப்படும் குடலுக்கு தேவையான பாக்டீரியாக்களைக் கொண்டது. இதில் புரதச் சத்தும் அதிகமாக உள்ளது. வயிறு மற்றும் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு தருகிறது.
தயிர்சாதம் சாப்பிட்டால் ஏதோ லகுவாக இருப்பது போல் உணர முடியும். இதில் உள்ள ப்ரோபயாடிக்ஸும், ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ்களும் உங்களை அவ்வாறு உணர வைக்கும். மேலும் தயிர் சாதத்தில் உள்ளது ஆரோக்கியமான கொழுப்பு. அதுவும் உடலுக்கு நன்மை சேர்க்கும். ஒரு கப் தயிர் சாதம் ஒரு நாள் முழுவதுக்குமான சக்தியை உடலுக்கு வழங்கக் கூடும். தயிர் சாதத்தில் உப்புச் சத்தும் குறைவு என்பதால் ரத்த அழுத்தத்தையும் சீராக வைக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்புபோடாத சாதத்தில் தயிர் சாதம் செய்து அன்றாடம் உட்கொண்டு வரலாம்.
தயிர் சாதம் பாலிவுட்டின் ஃபேவரைட்..
தயிர் சாதம் உள்ளிட்ட தென்னிந்திய உணவு வகைகள் பலவும் பாலிவுட் நடிகர்களின் ஃபேவரைட் டிஷ்ஷாக உள்ளது. ஏன் தெரியுமா? அதில் எண்ணெய் குறைவு, கலோரிக்களும் குறைவு. அதானாலேயே ஆலியா பட், மலைகா அரோரா, தென்னிந்திய நடிகை ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் தயிர் சாதம் மீது அலாதி பிரியம் கொண்டுள்ளனர்.
ஆலியா பட்:
ஆலியா பட் மிகப்பெரிய ஃபிட்நெஸ் ஃப்ரீக் என்பது அனைவரும் அறிந்ததே. அவரின் ஸ்லிம்மான உடல் வாகு நிறைய பேருக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அதற்காக பிரத்யேக டயட் ப்ளானையும் பின்பற்றுகிறார். வீட்டில் இருந்தால் அவர் உடனே நாடும் உணவு தயிர் சாதம் என அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கின்றது.
மலைக்கா அரோரா:
பாலிவுட்டின் ஃபிட்நஸ் திவா என்றால் அது மலைகா அரோராவுக்கே செல்லும். அவருடைய உடல் வில்லாக வளையும் தன்மை கொண்டது. சைய்யா சைய்யா பாடல் தொடங்கி பல பாடல்களில் நாம் அவரின் ஃபிட்நஸ்ஸை பார்த்து வருகிறோம். அவர் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் டயட் ப்ளான் பற்றி பேசுவார். அப்படிப் பேசும்போது அவர் தயிர் சாதம் பற்றியும் பேசியுள்ளார். தயிர் சாதத்தை தான் அன்றாடம் உட்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங்:
ரகுல் ப்ரீத் சிங் ஃபேஷன் ஐகான் மட்டுமல்ல ஃபிட்நஸ் ஃப்ரீக்கும் கூட. அவருடைய வளைவு, நெளிவுகளில் கிரங்கிக் கிடக்கும் ரசிகர்கள் ஏராளம். அவர் தனது டயட் பற்றி ஒரு பேட்டியில் பேசியிருப்பார். அப்போது தான் எப்போதுமே வீட்டில் சமைத்த உணவுகளையே உண்பேன் என்றும், தயிர் சாதம் தனது டயட் ப்ளானில் முக்கியமான உணவு என்றும் கூறியிருப்பார்.