ரஜினி என்ன அழ வச்சாரு! கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் இதான் நடக்கும்... லோகேஷ் கனகராஜ் பளீச்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மாநகரம் முதல் கடைசியாக வெளியான லியோ படம் வரை இதுவரை வெற்றிப்பாதையில் மட்டுமே பயணித்து வருகிறார்.

ரஜினி சார் என்ன அழவச்சாரு, சிரிக்க வச்சாரு என கூலி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார்
லோகேஷ் கனகராஜ்:
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மாநகரம் முதல் கடைசியாக வெளியான லியோ படம் வரை இதுவரை வெற்றிப்பாதையில் மட்டுமே பயணித்து வருகிறார். தமிழ் சினிமாவில் மல்ட் வெர்ஸ் என்கிற புதிய அத்தியாத்தையும் தொடங்கி வைத்தார்.
ரஜினியை வைத்து கூலி;
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்தில் நாகர்ஜூனா , உபேந்திரா , சத்யராஜ் , செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் , ஆமீர் கான் , பூஜா ஹெக்டே , ஆகியோர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவுபெற்றது. வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி கூலி திரைப்படம் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. கூலி படம் வெளியாக இன்னும் 100 நாட்களுக்கும் குறைவாக இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை தொடங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.
ரஜினி சார் அழவச்சாரு:
நடிகர் ரஜினி கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தவற்றை குறித்து லோகேஷ் கனகராஜ் பேசினார். அவர் பல விஷயங்களை வெவ்வேறு கோணங்களில் பார்த்திருக்கிறார். அவர் என்னை அழ வைத்தார், சிரிக்க வைத்தார், நல்ல அர்த்தத்தில் அழ வைத்தார். ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு பாடமாக இருந்தது. என்னை அழ வைத்த நபரைப் பற்றி நான் கேட்கும்போது, அவர் யார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் முன்னாடி நான் ஒரு குழந்தையைப் போல உணர்கிறேன்.
"He made me sit & realise, he made me think about lyf, he made me emotional, he made me to laugh" Loki also says that the last one year shooting of #Coolie was like a Happy trip with Thalaivar
— 𝐑𝐀𝐓𝐇𝐄𝐄𝐒𝐇 𝐑𝐀𝐉𝐈𝐍𝐈 🤘ॐ†☪ (@realrawrathesh1) May 11, 2025
Loki light ta emotional aaitaru😲💌
Credit / Full interview - https://t.co/vLqrlTXFBr pic.twitter.com/FgGPoJPg0Q
அவருடையை வாழ்க்கையை பற்றி சொல்லும்போது நானெல்லாம் என்ன பண்ணிவிட்டோம் வாழ்க்கையில் என்று தோன்றும் என்றார் லோகேஷ் கனகராஜ்
ரஜினி சம்பளம்:
ரூ 400 கோடி பட்ஜெட்டில் கூலி படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பின் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து இரு படங்களை ரஜினியை வைத்து தயாரித்து வருகிறது. இந்த படத்திற்காக ரஜினிகாந்த் ரூ 260 முதல் 280 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு இந்த படத்தில் 60 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.






















