Watch video : ”பாரீஸுக்கு வந்த மாதிரி” : பாண்டிச்சேரிக்கு போய் ஷிவாங்கி பண்ண சேட்டைகள் இதோ.. வைரலான வீடியோ!
விஜய் டிவியில் மீண்டும் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் சிவாங்கி களமிறங்கி அசத்தி வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகராக அறிமுகமானார் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல்கள் இணையத்தில் வைரலானது. அதனைத்தொடர்ந்து அவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் செய்த லூட்டிகள், சேட்டைகள் எல்லாம் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போக, இவருக்காகவே அந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்க்க ஆரம்பித்தனர்.
இந்நிகழ்ச்சியின் 2 ஆவது சீசன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்தது. ஆனாலும், சிவாங்கி அந்த நிகழ்ச்சியில் செய்த ஒவ்வொரு குறும்புதனமும், அவர் அடித்த லூட்டிகள் யூடியூப்பில் வியூஸ் மட்டும் லைக்ஸ்களை அள்ளிக்கொண்டுதான் இருக்கிறது. இதனால் எல்லோருக்கு பிடித்த ஒருவராக சிவாங்கி மாறிவிட்டார். சின்னத்திரையில் கிடைத்த புகழின் மூலம் தற்போது வெள்ளித்திரையிலும் சிவாங்கி காலடி பதித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள ‘டான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவாங்கி நடித்து வருகிறார்.
தொடர்ந்து, தற்போது விஜய் டிவியில் மீண்டும் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் சிவாங்கி களமிறங்கி அசத்தி வருகிறார். இந்தநிலையில், இவர் படுபிசியாக இருக்கும் இந்த நேரத்திலும் தன் நண்பர்களுடன் பாண்டிச்சேரியில் பொழுதை கழித்து வருகிறார். இதுகுறித்த வீடியோவை சிவாங்கி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அந்த வீடியோவின் கீழ் அவர் கொடுத்த கேப்சனில் 'பாண்டிச்சேரியில் எனது ஒரு நாள், ஆனால் பாரிஸ் நகரில் இருந்ததை போல் உணர்ந்தேன் என்று குறிபிட்டுள்ளார்.
சமீபத்தில், சிவாங்கி பாடி நடித்துள்ள 'NO NO NO NO’ பாடல் வெளியாகி சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பாடலை சிவாங்கியும், சூப்பர் சிங்கர் பாடகரான ஐய்யனார் மற்றும் இந்த பாடலின் இசையமைப்பாளர் கார்த்திக் தேவராஜ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்