மேலும் அறிய
Advertisement
Watch Video: கனட நாட்டு ரயிலில் சிவாங்கி செய்த சம்பவம்... ஷாரூக் கான் பார்த்தால்?
கனடாவிற்கு சென்றுள்ள சிவாங்கி ரயிலில் தைய தைய பாடலுக்கு அழகாக ஆடியுள்ளார்.
பிரபல பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கி கிருஷ்ணகுமார் சூப்பர் சிங்கர் 7 வது சீசனில் கலந்து கொண்டு அழகாய் பாடினாலும், சிவாங்கிக்கு எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் குக் வித் கோமாளி எனும் ரியாலிட்டி ஷோ மூலமாக புகழின் உச்சத்தை அடைந்தார். பிரபலமான பிறகு இவர் பல ஆல்பம் பாடல்களிலும் சில திரைப்பட பாடல்களிலும் பாடினார்.
View this post on Instagram
சமீபமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் லில்லி என்ற துணை கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்தில் க்யூட் காலேஜ் பெண்ணாகவும், கதாநாயகியின் தோழியாகவும், கதாநாயகன் சிவாவை சைட் அடிக்கும் பெஸ்டியாகவும் நடித்துருப்பார். இவருக்கு இன்ஸ்டாவில் இவருக்கு 4.9 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர். அதனால் சிவாங்கி இன்ஸ்டாவில் செம ஆக்டிவ்.
View this post on Instagram
லீவ் டைம்மில் அடிக்கடி பல ஊர்களுக்கு பயணம் செல்வதை வழக்கமாக கொண்ட சிவாங்கி தற்போது கனடா நாட்டு ரயிலில் தைய தைய பாடலுக்கு அழகாக ஆடியுள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உயிரே படத்தில் தைய தைய என்ற பாடலுக்கு ரயில் மீது ஆடியிருப்பார். இப்பாடல் ஹிந்தி மற்றும் தமிழில் வெளியாகி செம ஹிட்டானது. இதேபாடலுக்கு சிவாங்கி கனடாவில் உள்ள ரயிலில் க்யூட்டான ப்ராக் அணிந்து நடனம் ஆடியுள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion