Yogi Babu Networth: பல நாள் பட்டினி; அன்று சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நடிகர் யோகி பாபுவின் இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை தங்களது காமெடிக்குள் வைத்திருந்தவர்கள் தான் கவுண்டமணி, செந்தில். இருவரும் இல்லாமல படம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இருவரும் இணைந்தே ஏராளமான படங்களில் நடித்தனர். இப்போது அவர்களது வரிசையில் இடம் பிடித்து காமெடியில் கலக்கி வருபவர் யோகி பாபுவின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.
யோகி பாபு:
அமீர் நடிப்பில் வெளியான யோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் யோகி பாபு. இதன் பின்னர் பையா, தில்லாலங்கடி, வேலாயுதம், தூங்கா நகரம், ராஜபாட்டை, கலகலப்பு, அட்டக்த்தி, சூது கவ்வும், வீரம், அரண்மணை என்று ஆரம்பித்து இப்போது கஜானா, மெடிக்கல் மிராக்கல், ஏஸ், குட் பேட் அக்லீ, மலை, அகத்தியா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் 10 படங்களுக்கு குறைவில்லாமல் வெளியாகும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் யோகி பாபு நடிப்பில் கிட்டத்தட்ட 18 படங்கள் வெளியானது. ஹீரோக்களை விட அதிக படங்களில் நடித்து வருபவர்களின் பட்டியலில் யோகி பாபு இடம் பெற்றுள்ளார். கவுண்டமணி, வடிவேலு, விவேக் போன்று காமெடியில் கலக்கியதோடு கதையின் நாயகனாகவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
கோடிக்கணக்கில் சம்பளம்:
ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் யோகி பாபுவும் ஒருவர். ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ரூ.5 கோடி வரையில் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. கால்ஷீட் கூட கொடுக்க முடியாத அளவிற்கு சினிமாவில் காலூன்றியிருக்கிறார். படங்களில் நடித்து முடித்த கையோடு கோவில்களுக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கையில் பல வண்ணங்களில் கயிறு கட்டி இருப்பதே, இவருக்கு ஆன்மீகத்தில் எவ்வளவு நம்பிக்கை உள்ளது என்பதை எடுத்து கூறும்.
யோகி பாபு சொத்து மதிப்பு:
இந்த நிலையில் தான் இவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்று அலசி ஆராய்ந்த போது சென்னையில் பிரம்மாண்டமான வீடு ஒன்றும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சொந்த ஊராக கொண்ட யோகி பாபுவின் தந்தை இந்திய இராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றியிருக்கிறார். இதன் காரணமாக 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் யோகி பாபு ஜம்முவில் தான் படித்துள்ளார். இப்போது சென்னையில் ஒரு வீடு உள்ளது. ஆரணியில் பண்ணை வீடும் வைத்துள்ளாராம். ஆடி, பிஎம்டபிள்யூ என்று பல சொகுசு கார்களை வைத்துள்ளாராம். இப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் யோகி பாபு ஒரு காலத்தில் ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்பட்டுள்ளார். இன்று ரூ. 100 முதல் 125 கே கோடி சொத்துக்கு அதிபதியாக வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.