Singamuthu on Vadivelu: அரசியலுக்கும் வடிவேலுக்கும் செட் ஆகாது... ராசி இல்லை என அவரே ஒதுங்கிவிட்டார்... பகிரங்கமாக விமர்சித்த சிங்கமுத்து
Singamuthu on Vadivelu : நடிகர் வடிவேலுவுக்கு அரசியலில் ராசியில்லை. அவர் சென்ற இடமெல்லாம் தோல்வி தான் மிஞ்சும் என பகிரங்கமாக விமர்சனம் செய்துள்ளார் நடிகர் சிங்கமுத்து.
தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான பாடி லாங்குவேஜ் மூலம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்த நடிகர்களில் ஒருவர் நடிகர் சிங்கமுத்து. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகர் சிங்கமுத்து, வடிவேலுவின் அரசியல் பற்றி மிகவும் வெளிப்படையாக விமர்சித்து இருந்தார்.
2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது நடிகர் வடிவேலு தி.மு.க கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் அந்த தேர்தலில் தி.மு.க கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த சமயத்தில் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். தே.மு.தி.க கட்சி அந்த சமயத்தில் ஆ.தி.மு.க கட்சியின் கூட்டணியில் இருந்ததால் வடிவேலுவின் விமர்சனங்களே அவரை வெகுவாக பாதித்தது. வடிவேலுவின் கடுமையான விமர்சனங்களால் அவரின் திரைப்பயணமே சிறிது காலத்திற்கு ஸ்தம்பித்து போனது. அதற்கு அவர் முன்வைத்த விமர்சனங்களே காரணமாக இருக்கலாம் என பேச்சு அடிபட்டது.
இந்நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் பற்றின கேள்விகளுக்கு பத்திரிகையாளர்களிடம் பதில் அளித்து இருந்தார் நடிகர் சிங்கமுத்து. வடிவேலுவுக்கு அரசியல் யோகம் இல்லை என அவரே பேட்டி ஒன்றில் பேசி இருந்தார்.
வடிவேலு தி.மு.க கட்சிக்காக பேசிய சமயத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா யார் அவருக்கு எதிராக செயல்படுகிறார்கள் என பார்வையிட்டார். அப்போது வடிவேலுவின் பேச்சை கேட்ட ஜெயலலிதா, அவரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்ததால் என்னவாக இருக்குமோ என பதட்டத்துடனே ஜெயலலிதா அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். ஏதாவது தப்பாக பேசிவிட்டோமா? அடிப்பார்களா என பீதியுடனே சென்றுள்ளார் வடிவேலு. ஆனால் அங்கு போனதும் தலைகீழாக இருந்தது பேச்சு வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் எந்த இடத்தில் எல்லாம் கால் வைக்கிறாரோ அங்கெல்லாம் தோல்வி தான் மிஞ்சியது. நாங்கள் எங்கெல்லாம் சென்றோமோ அங்கெல்லாம் வெற்றி தான் கிடைத்தது. அவர் செல்லும் இடம் எல்லாம் தோல்வி ஏற்பட்டதால் அவரே ராசியில்லாதவர் என முடிவு செய்து கொண்டு அரசியலில் இருந்து விலகினார் வடிவேலு. ஒரு வேளை முதலமைச்சர் கூட அந்த சமயத்தில் வடிவேலுவை தொடர்பு கொண்டு "நீங்கள் கட்சிக்கு விஸ்வாசியாக மட்டும் இருங்கள், பிரச்சாரம் எல்லாம் செய்ய வேண்டாம். உங்க நாக்குல சனி இருக்கு என்று கூட கூறியிருக்கலாம்" என விமர்சனம் செய்து இருந்தார் நடிகர் சிங்கமுத்து.
முன்னரே வடிவேலு அரசியல் வாழ்க்கை எல்லாம் பழங்கதையாக மாறிவிட்டது. அதனால் இனி நடிப்பதில் மட்டும் என்னுடைய கவனத்தை செலுத்த போகிறேன் என பல ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்து இருந்தார் வடிவேலு என்பது குறிப்பிடத்தக்கது.