Actor Vadivelu Birthday : மீம் கடவுளுக்கு அரோகரா.. நடிகர் வடிவேலுவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..
காமெடி நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளையொட்டி சமூக வளைத்தளங்களில் மற்ற பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் 20 வருடங்களுக்கும் மேலாக காமெடி நாயகனாக கோலோச்சி வருபவர் வடிவேலு. 2000ஸ் காலங்களில் கோலிவுட்டிற்குள் நுழைந்த இவர், தனது உடல் மொழியாலும், வசனங்களினாலும் மக்களை ஈர்த்தவர். இவரது வசனங்கள் ஒலிக்காத இல்லங்களே இல்லை, இவரைப் பிடிக்காத குழந்தைகளும் இல்லை. ஆதித்யா, சிரிப்பொலி போன்ற நகைச்சுவை சேனல்களில் இவரது நகைச்சுவை காட்சிகள் ஒலிபரப்பான காலம் என்றோ மலையேறிவிட்டது. இன்று ஆன்ட்ராய்டு முதல், ஐஃபோன் வரை எங்கு திரும்பினாலும், சமூக வலைதளம் எல்லாம் இவர் முகம்தான். கிடைப்பதையெல்லாம் கன்டென்டாக மாற்றி, அனைவரையும் சிரிக்க வைத்து, மீம் க்ரியேட்டராக உலா வரும் அனைவருக்கும் முகமே இவர்தான். வடிவேலுவின் முகம் இல்லையென்றால், மீம்ஸ்களே இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு டெம்ப்ளேட்டுகளை அள்ளி அள்ளி கொடுத்துள்ளார்.
Happy Birthday King 👑, use a Vadivelu reaction to say how you feel today… 😂😛 pic.twitter.com/BpmderbRoe
— Madan Gowri (@madan3) September 12, 2022
நடிகர் வடிவேலுவின் தனித்துவத்தை எடுத்துக்காட்டுவது, அவரது உடல் மொழியும் அவர் பேசும் வசனங்களின் தொனியும்தான். “சிங் இன் தி ரெய்ன்..” என மனதை திருடிவிட்டாய் படத்தில் இவர் பாடிய பாடலை, வாழ்வில் கஷ்டங்கள் வரும் நேரங்களில் அனைவரும் பாடுவதுண்டு. அதே போல, ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் இவர் பேசிய, “ஆணியே புடுங்க வேணாம்..” என்ற டைலாக்கை தேவையில்லாத வேலை செய்து துன்புறுத்துவோரிடம் பயன்படுத்துகிறோம். சமீபத்தில் கூட, #JusticeforNesamani என்ற ஹேஷ்டாக இணையம் முழுவதும் வைரலாகி, நேசமணி கதாப்பாத்திரத்தை மீண்டும் அனைவரின் கண்முன்னும் வந்து நிறுத்தியது.
இப்படி அனைவரையும் சிரிக்க வைத்த நகைச்சுவை நாயகன் வடிவேலு இன்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வளைத்தளங்களில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதில் சில வாழ்த்துகளைப் பார்க்கலாம்.
Happy birthday brother! Thanks for making me and everyone laugh. I pray ragavendra swamy for your good health and peace ♥️💐 #HappyBirthdayVadivelu pic.twitter.com/03yUt0lXt9
— Raghava Lawrence (@offl_Lawrence) September 12, 2022
Team #NaaiSekarReturns wishing our Comedy Icon Vaigai Puyal #Vadivelu a very Happy Birthday! #HBDVadivelu 🐶💯 ORIGINAL ✨@LycaProductions @Director_Suraaj @Music_Santhosh @iamshivani_n @UmeshJKumar @EditorSelva @shuttervik @sivaangi_k @proyuvraaj pic.twitter.com/BZitJy7hdQ
— Sathish Kumar M (@sathishmsk) September 12, 2022
Thank god for making his birth🙏🏻 Makes smile on face even in the good & bad phases of our life☺️ தன்ன வருத்தி மத்தவங்கள சிரிக்க வைக்குறாரு🙏🏻 He may be not in mission, but his comedies still "Emperoring" 🔥👑 Live long Thalaivaa🥰✨️ @Vadiveluhere #HappyBirthdayVadivelu #Vadivelu pic.twitter.com/dg0tk50Lpu
— Vijay Banu (@Banu23334896) September 12, 2022
தொடர்ந்து காமெடி ரோலில் நடித்து வந்த வடிவேலு, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படம் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில், இரண்டு வேடத்தில் நடித்திருந்தார் வடிவேலு. நகைச்சுவை-புராண கால கதையம்சம் என கலவையாக ரசிகர்கள் முன் வைக்கப்பட்ட இப்படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் வடிவேலு என்றால், அது மிகையாகாது.