மேலும் அறிய

Raju SrivastavaPasses Away : புன்னகை கரைந்தது.. நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா காலமானார்.. துயரத்தில் ரசிகர்கள்..

Raju Srivastava Passes Away : நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த , நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா  உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

Raju Srivastava Passes Away : நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த , நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா  உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாரடைப்பால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவனையில் ராஜூ ஸ்ரீவஸ்தவா அனுமதிக்கப்பட்டார். அதே நாளில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. ஆனால் சுயநினைவின்றி வெண்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் ராஜூ ஸ்ரீவஸ்தவா நிலை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாததால் குடும்பத்தினர், ரசிகர்கள் உட்பட அனைவரும் சோகத்தில் இருந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளதாக பிரபல ANI செய்தி நிறுவனம்  தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. முகம் முழுக்க சிரிப்புடன் , ரசிகர்களை சிரிக்க வைத்து விடைப்பெற்ற ராஜூ ஸ்ரீவஸ்தாவிற்கு வயது 50.

 

கடந்த ஆக்ஸ்ட் 10 ஆம் தேதி பிரபல ஜிம் ஒன்றில் , ட்ரெட்மில்லில் ஓடியவாரு  உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராஜூ ஸ்ரீவஸ்தவா திடீரென நெஞ்சுவலியால் கீழே விழுந்திருக்கிறார். இதனையடுத்து ஜிம்மின் மேலாளர் அவரை அருகில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். இந்த சம்பவம்  11- 11:30 மணியளவில் ஏற்பட்டதாக காமெடியன் ராஜுவின் மேனேஜர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது . ஆனாலும் ராஜூவின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து  வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். இந்த நிலையில் 35 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மூளைச்சாவு அடைந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் அதனை யாரும் நம்ப வேண்டாம் என உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில்தான ராஜூ ஸ்ரீவஸ்தா உயிரிழந்துவிட்டதாக , ஏ.என்.ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மிகுந்த அதிர்சியையும் , மீளா சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவருக்கு அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raju Srivastav (@rajusrivastavaofficial)


இந்தியில் 1988 ஆம் ஆண்டு வெளியான தேசாப் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா 2005 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ரியாலிட்டி ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்சின் முதல் சீசனில் பங்கேற்ற பின் பிரபலமானார். உத்தரபிரதேச திரைப்பட மேம்பாட்டு கவுன்சிலின் தலைவராக இருந்த அவர், மைனே பியார் கியா, பாசிகர், பாம்பே டு கோவாவின் ரீமேக் மற்றும் ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாய்யா போன்ற பல இந்தி படங்களில் நடித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget