மேலும் அறிய

Cinema News Today LIVE: பிரபல நடிகர் மயில்சாமி மறைவு - திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி

திரையுலகம் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் கீழே ஏபிபி நாடு சினிமா லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

LIVE

Key Events
Cinema News Today LIVE: பிரபல நடிகர் மயில்சாமி மறைவு - திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி

Background

தமிழில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமான மயில்சாமி, திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். மாரடைப்பு காரணமாக சென்னை  போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மயில்சாமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 57. ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார். தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர், அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துகளையும் அவர் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரடைப்பு:

விருகம்பாக்கத்தில் வசித்து வந்த மயில்சாமிக்கு, அதிகாலை 03.30 நெஞ்சுவலி ஏற்படவே, குடும்பத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஏற்கனவே ஒருமுறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவு, இது இரண்டாவது முறை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மயில்சாமி உடலுக்கு  சென்னையிலேயே இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல்  நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

கலை பயணம்:

1965ம் ஆண்டு ஜுன் மாதம் 5ம் தேதி  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த மயில்சாமி,  முதன் முதலில் மிமிக்கிரி கலையால் பொதுவெளியில் அறியப்பட்டார். 1984ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர்,  சிறியது முதல் பெரியது வரை பல்வேறு வேடங்களில் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான லெஜண்ட் படத்திலும் நடித்து இருந்தார். 2000ம் ஆண்டுக்கு பிறகு பலரும் அறியப்படும் நடிகராக பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ”திருப்பதியில் லட்டுக்கு பதிலா அல்வா கொடுக்குறாங்க பாஸ், எதிர்த்து நிக்குறது தோனி மா, அது அநாவசியம்” போன்ற மயில்சாமியின் வசனங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள மீம் டெம்ப்ளேட்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளர்:
2002 முதல் 2004 வரை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றையும் மயில்சாமி தொகுத்து வழங்கினார், அதற்காக 2003 இல் சிறந்த தொகுப்பாளருக்கான டெலி விருதையும் வென்றார்.

17:29 PM (IST)  •  19 Feb 2023

தாயாரின் மறைவைத் தொடர்ந்து சென்னைக்கு விரைந்த லியோ படத்தின் ஒளிப்பதிவாளர்..

விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் தாயார் உயிரிழந்துள்ளார். இதனால், மனோஜ் லியோ படப்பிடிப்பிலிருந்து சென்னைக்கு திரும்பவுள்ளார். 

17:23 PM (IST)  •  19 Feb 2023

சமுத்திரக்கனி, கதிர் ஆகியோரின் நடிப்பில் திரைக்கு வந்த ’தலைக்கூத்தல்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது!

கதிர், சமுத்திரkகனி உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில்  தலைக்கூத்தல் கடந்த 3ஆம் தேதி வெளியான திரைப்படம், தலைக்கூத்தல். இப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 3ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


16:35 PM (IST)  •  19 Feb 2023

பிரபுதேவாவின் பாகீரா திரைப்படம் மார்ச் 3ஆம் தேதி வெளியாகிறது..

நடனக்கலைஞரும் நடிகருமான பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், பாகீரா. இப்படம், மார்ச் 3 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


15:45 PM (IST)  •  19 Feb 2023

மயில்சாமியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் தனுஷ்..

குணச்சித்திர நடிகர் மயில்சாமியின் மறைவிற்கு, பிரபல நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார். 


14:44 PM (IST)  •  19 Feb 2023

அ.இ.அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், மயில்சாமியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்

நடிகர் மயில்சாமியின் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், அ.இ.அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர், வைகைச்செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

நடிகர் மயில்சாமி மறைந்து விட்டார்...! நீங்கள் சாப்பிடுவது சைவ சாப்பாடா..? அசைவ சாப்பாடா..? என்று கேட்டால் எம்.ஜி.ஆர் சாப்பாடு என்பார்...! நல்ல மனிதர், நயத்தகு பண்பாளர்..! என்று நினைவு கூறுகிறேன்..!

-இவ்வாறாக வைகைச்செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Breaking News LIVE:  ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்க உரிமை கோரினார் ஹேமந்த்!
Breaking News LIVE: ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்க உரிமை கோரினார் ஹேமந்த்!
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Embed widget